பாக்கியலட்சுமி சீரியலில் வரும் நாட்களில் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி தற்போது அந்தத் தொடரில் கோபியாக நடித்து வரும் சதீஷ் முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் இனி வரும் நாட்களில் ராதிகாவும் கோபியும் இணைந்து பாக்யா வீட்டில்தான் வசிக்கப் போகிறோம் என்றும், சில காலத்திற்கு கதை இப்படியாக நகரப் போகிறது என்றும் ஒரு முக்கியமான அப்டேட் ஒன்றை கொடுத்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருந்து வருவது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்யாவை விவாகத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார் கோபி. இரண்டாவது மனைவியை திருமணம் செய்த நாள் தொடங்கி கோபிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இரண்டாவது மனைவி ராதிகாவின் தொல்லைகளை தாங்க முடியாத கோபி அளவுக்கு அதிகமாக குடிக்க தொடங்குகிறார். குடித்துவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்து போன கோபியின் தாயார் கோபியை இரண்டாவது மனைவியிடம் இருந்து காப்பாற்றி தங்களது வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடிவெடுக்கிறார். கீழே விழுந்து கிடக்கும் கோபியை செழியன் காப்பாற்றி பாக்யாவின் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். இது கோபியின் வீடு இனிமேல் கோபி இன்று தான் இருப்பார் என்று ஈஸ்வரி பாட்டியும் கண்டிப்பாக சொல்லிவிட்டார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியானது. அதில் ராதிகாவும் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டிற்கே வந்து விட்டார். என் கணவர் கோபி இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என்று சொல்லி ராதிகாவும் பாக்யாவும் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் கோபி தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இனிமேல் சில காலத்திற்கு நானும் ராதிகாவும் பாக்யாவின் வீட்டில் தான் இருக்கப் போகிறோம், கதை இப்படித்தான் நகரப்போகிறது என்று பேசியிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச காலத்திற்கு கோபிக்கு அனைத்து பக்கத்தில் இருந்தும் அடி கிடைக்கும், ராதிகாவிடமிருந்து அடி, அப்பாவிடம் இருந்து அடி, மகனிடம் இருந்து அடி, பாக்யா நல்லவர் அவர் தன்னை அடிக்க மாட்டார். இனிமேல் கதை இன்னும் கொஞ்ச காலத்திற்கு இப்படித்தான் செல்லும் என்று பேசி இருக்கிறார். அவரின் இந்த அப்டேட் மூலமாக கோபி ராதிகா பாக்கியா ஆகிய மூவரும் ஒரே வீட்டில் தான் வசிப்பார்கள் என்று தெரிகிறது. கதைக்களம் இன்னும் சூடு பிடிக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது கோபி வெளியிட்டு இருக்கும் வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O