Categories: சினிமா

“பட்டு துணில ஜட்டி தெச்ச மாதிரி ஆயிடுச்சு – ultimate -ஆக review செய்துள்ள பிரஷாந்த்”

வெளியிட்டது

இன்று நடிகர் அருள் சரவணன் நாயகனாக அறிமுகமான ‘தி லெஜெண்ட்” படம் திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரௌட்டல, விவேக், விஜயகுமார், நாசர், யோகிபாபு, சுமன், சிங்கம்புலி என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஜே.டி – ஜெர்ரி இணை இயக்கியுள்ளனர். மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. video given below.

"பட்டு துணில ஜட்டி தெச்ச மாதிரி ஆயிடுச்சு - ultimate -ஆக review செய்துள்ள பிரஷாந்த்" 1

ரஜினி, விஜய், அஜித் படத்திற்கு போடுவது போல சென்னையின் பல முக்கிய திரையரங்குகளில் காலை 4 மணி, 5 மணி ஷோவெல்லாம் திரையிடப்பட்டன. 10 நாயகிகளுடன் அசரவைத்த ஆடியோ லான்ச், மாபெரும் பொருட்செலவு கண்ணுக்கு தெரியும் ட்ரைலர், ஹிட் அடித்த ஹாரிஸ் ஜெயராஜின் இசை என நிறைய விஷயங்கள் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டியது.

ஆனால் இன்று படம் பார்த்த பலரும் படத்தினை மிக பெரிய அளவில் கலாய்த்து வருகிறார்கள். நடிக்கவே வரவில்லை என முதல் படத்தில் நாயகர்களுக்கு வரும் விமர்சனம் என்றாலும், உண்மையில் இனைறன் நடிப்பை பார்க்கவே நிறைய திரையரங்குகள் இன்று ஹவுஸ் புல் ஆகியுள்ளன. அதுவே மிக பெரிய விஷயம். ரசிகர்கள் பலரும் படத்திற்கு இவ்வளவு செலவு சேட்டை நீங்கள் கொஞ்சம் கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் படம் நன்றாகவே இருந்திருக்கும் என பேசிவருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பிரஷாந்த் இந்த படத்தை விமர்சனம் செய்துள்ளார். அவர் பேசியதாவது, “தலைவா, நீ பேசாம கம்முனு இருந்திரு, நிறைய பேர் வருவாங்க நீங்க மாஸ் சார், அப்படி சார், இப்படி சார்’னு தயவு செஞ்சி வேணமே, நமக்கு வரல, பேசாம அழகா ஒரு நல்ல படத்தை produce பன்னுங்க. நமக்கு இது கொஞ்சம் கூட வரல, இது எப்படி ஆயிடுச்சுனா பட்டு துணி எடுத்து அதுல ஜட்டி தெச்ச மாதிரி ஆயிடுச்சு….பெரிய request இதுக்கெல்லாம் பதிலா உங்க கடையில காலைல இருந்து நைட் வரைக்கும் உட்காரமா நின்னு உங்களுக்கு சம்பாரிச்சி கொடுத்துட்டு இருக்காங்களே அவுங்களுக்கு ஆளுக்கு ஒரு 10000 இல்ல 5000 போட்டு விடுங்க, இனிமே சினிமா கண்டிப்ப வேணாம்” என கேலியும் கிண்டலுமாக ரிவியூ செய்துள்ளார்.

Video Courtesy – Tamil cinema review.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்