ஆக்‌ஷனில் பின்னி எடுத்துள்ள அதர்வா.. குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர் வெளியானது | Kuruthi Aatam Official Trailer

நடிகர் அதர்வா நடித்துள்ள குருதி ஆட்டம் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. நடிகர் முரளியின் மகனாக அதர்வா திரைத்துறையில் ஆனா காத்தாடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம் பரதேசி என்ற படத்தில் நடித்தார். பரதேசி படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எதார்த்தமான நடிப்பால் பலரது உள்ளங்களை கவர்ந்திருந்தார் அதர்வா. அதன் பின்னர் இவர் இரும்பு குதிரை, சண்டிவீரன், ஈட்டி, இமைக்கா நொடிகள்,100 போன்ற பல படங்களில் நடித்தபோதும் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருந்து வருகிறார். இடைப்பட்ட நாட்களில் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்திருந்த போதிலும் மீண்டும் தற்போது குருதி ஆட்டம் என்ற படத்தின் மூலமாக திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார் நடிகர் அதர்வா. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தை ராக்போர்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  கீழே உள்ள ட்ரெய்லர் வீடியோவை பார்க்கவும்.

ஆக்‌ஷனில் பின்னி எடுத்துள்ள அதர்வா.. குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர் வெளியானது | Kuruthi Aatam Official Trailer 1

விளம்பரம்

இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படத்தில் ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது. எட்டு தோட்டாக்கள் என்ற படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்த படத்தை இயக்கி முடித்துள்ளார் .இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஆண்டு நிறைவு பெற்ற போதிலும் பல்வேறு சிக்கல்களால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஆகி கொண்டே இருந்தது. படத்தின் வெளியீட்டு தேதியை பலமுறை அறிவித்தும் படம் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போனது.

தொடர்புடையவை  மாலத்தீவில் ஆளே மாறிய Sivaangi..! கதாநாயகிகளை மிஞ்சும் போஸ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

ஆக்‌ஷனில் பின்னி எடுத்துள்ள அதர்வா.. குருதி ஆட்டம் படத்தின் ட்ரைலர் வெளியானது | Kuruthi Aatam Official Trailer 3

விளம்பரம்

திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதை குறித்து சொல்லும் பொழுது, கபடி போட்டியில் அதர்வா சந்திக்கும் பல பிரச்சனைகளை பற்றிய கதையாக தான் இந்த கதை நகர்கிறது. அதர்வா அந்த பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டார் அவரது வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தின் கதையாக உள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அந்த ட்ரெய்லரை நீங்களும் காண.. Watch kuruthi Aatam trailer below…

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Five Star Audio

விளம்பரம்

Leave a Comment