இயக்குனர் ஹரி மற்றும் ப்ரீத்தா ஆகியோர் இன்று தங்களது 3வது டப்பிங் ஸ்டுடியோஸ் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். அதற்க்கான பூஜை இன்று நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

2003ம் ஆண்டு வெளியான ‘சாமி’ என்கிற படத்தை இயக்கத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனர் அறிமுகம் ஆனவர் இயக்குனர் ஹரி.
இதன் பின்னர் அவர் ‘கோவில்’, ‘தாமிரபரணி’, ‘அருள்’, ‘ஐயா’, ‘வேல்’, ‘சிங்கம்’ போன்ற படங்களை கொடுத்திருக்கிறார்.
நடிகர் சூர்யாவை வைத்து மட்டும் ‘சிங்கம்’ பாகம் ஒன்று, இரண்டு, மூன்று என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார்.
கடைசியாக தனது மனைவியின் அண்ணன் அருண் விஜயை வைத்து ‘யானை’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது விஷாலை வைத்து ‘ரத்னம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் ஹரிக்கும், நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் நடிகை பிரீத்தாவிற்கும் கடந்த 2002ம் ஆண்டு திருமணமாகி குழந்தைகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ‘குட்லக் ஸ்டூடியோ’ என்கிற நிறுவனத்தை இருவரும் இணைந்து தொடங்கி இருந்தனர். இந்த நிறுவன திறப்பு விழாவிற்கு நடிகர் சூர்யா நேரில் வந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இருந்தார்.
திரைத்துறை பணிகளுக்கான ரெக்கார்டிங், டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகளை செய்வதற்காக நவீன வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய அந்த ஸ்டுடியோவை அவர்கள் தொடங்கி இருந்தனர்.
இந்த நிலையில் இன்று அந்த ஸ்டுடியோவின் 3வது கிளையை தொடங்கியுள்ளனர்.
அதன் திறப்பு விழா மற்றும் பூஜை புகைப்படங்கள் இன்று நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பலரும் ப்ரீத்தா ஹரி தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.