தனியார் நிறுவனமான பாரத் பெட்ரோலியம்!

தனியார் நிறுவனமான பாரத் பெட்ரோலியம்! 1

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பி.பி.சி.எல்.,), இந்திய கப்பல் போக்குவரத்து (எஸ்.சி.ஐ.,) மற்றும் இந்திய சரக்கு பெட்டக கழகம் (கான்கார்) போன்ற 5 நிறுவனத்தில், அரசின் சார்பில் உள்ள பங்குகளை விற்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

டில்லியில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பி.பி.சி.எல்., எஸ்.சி.ஐ., மற்றும் கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள பங்குளை விற்பனை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருமானம் குறைந்தது. இந்த நிலையில், வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

விளம்பரம்

இதன்படி, நாட்டின் இரண்டாவது பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில், மத்திய அரசின் 53.29 சதவீத பங்குகினை விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.பி.சி.எல்., முற்றிலும் தனியார் மயமாகும். மேலும் எஸ்.சி.ஐ., நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 63.75 சதவீத பங்குகளில் 53.75 சதவீத பங்குகளையும், கான்கார் நிறுவனத்தில் அரசின் வசமுள்ள 54.80 சதவீத பங்குகளில், 30.9 சதவீத பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment