பெங்களூருவை பூர்வீகமாக கொம்டா நடிகை பிரியாமணி 2002ஆம் ஆண்டு தெலுகு சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானலும் இயக்குனர் பாலு மஹேந்திராவின் தனுஷ் நடித்து வெளியான “அது ஒரு கனா காலம்” படமே இவர்க்கு நடிக்க தெரிந்த நடிகையாக மக்களிடம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இதுவே தமிஜிஹ்ல் இவர் நடித்த்த முதல் படமாகும். 2005 ஆம் வெளியான இந்த படம் விமர்சகர்களை கவர்ந்த போதிலும் படம் தோல்வியை தவறியது.

அதன் பின் சில மலையாள. தெலுங்கும் பாடங்களில் நடித்த இவரை அமீர் கார்த்தியுடன் நடிக்க “பருத்திவீரன்” படத்திற்காக 2007ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். கிராமத்து இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக நடிகை ப்ரியாமணி பல பாராட்டுகைளுயும், விருதுகளையும் வென்று குவித்தார். குறிப்பாக தமிழ அரசின் சிறந்த நடிகை விருது, தேசிய விருது என தமிழில் இரண்டொரு படத்திலேயே பெரிய அளவிற்கு முன்னேறினார்.
அதன் பின் தெலுங்கு சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற துவங்கி கவர்ச்சி நடிகையாக நடிக்க துவங்கிய இவர், கடைசியில் கவர்ச்சிக்காக பயன் படுத்தப்பட்ட நடிகையாகவே மாறிப்போனார். தெலுங்கு, கன்னட படங்களில் மாறி மாறி நடித்ததால், தமிழ் படங்களில் சொற்ப வாய்ப்புகளே அதுவும் முன்னர் அமைந்த படி இல்லாமல், வெறும் இரண்டு பாடல்கள் கொஞ்சம் காட்சிகள் என நடிக்கும் வாய்ப்புகளே சென்றன.
பிலிம் பேர் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளில் அந்த விருதினை வெவ்வேறு படங்களுக்காக வாங்கி உள்ளார். தற்போது இந்திய OTT தொடரில்களில் முதன்மை தொடராக கருதப்படும் “The Family Man” தொடரில் நாயகியாக நடித்து அதற்கும் சிறந்த நடிகைக்கான OTT பிலிம் பேர் விருது வாங்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என முக்கிய மொழி படங்களில் நடித்து மக்களிடம் இன்றளவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
சினிமாவில் பரபரப்பாக நடித்து கொண்டிருக்கும் போதே 2017ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். படங்கள் தவிர OTT தொடர்கள், பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். அசுரன் பட தெலுங்கு ரீ-மேக் நாரப்பாவில் நடித்து இருந்த இவர் இப்போது அட்லீ இயக்கிவரும் ஷாருக் கானின் “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார்.
நடிப்புக்கு திரும்பியது குறித்து பேட்டியளித்துள்ள அவர், தென்னிந்திய திரையுலகில் தான் எதிர்கொண்ட சவால்களையும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது சில நடிகைகள் வலுக்கட்டாயமாக கிளாமர் ரோலுக்கு தள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். அதே போல பாலிவுட் நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு,தென்னிந்திய நடிகைகளுக்கு இருக்கும் உடல்வாகு வேறு. இருப்பினும் வேண்டும் என்றே நடிகைகள் கிளாமர் சீன்களில் நடிக்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இப்போது நிலைமை கொஞ்சம் மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.