குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பரியங்கா இடையே வெடித்திருக்கும் மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பலரும் மணிமேகலைக்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் மணிமேகலை மீது தவறு இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் மணிமேகலை அனைவர்க்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பேசிய அவர், பிரியங்கா செய்த தவரைப்பற்றி மட்டும் பேசினால் போதும், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் பேச வேண்டாம் என கூறி உள்ளார். மேலும் கூட இருந்தே தனக்கு எதிராக பேசும் கோமாளிகளை பார்த்து, சொம்புக்கு எல்லாம் என்ன மரியாதை என கடுமையாக விமர்சித்து இருந்தார்.
ஆனால் இதுவரைக்கும் பிரியங்கா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கடற்கரையின் அழகை ரசிக்கும் அவர் Back To The Grind என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோவில் மணிமேகலை ஆதரவாளர்கள் திட்டி வருகின்றனர்.