பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பகுதியின் கிளைமாக்ஸ் காட்சிகள் எவ்வாறு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கி தற்போது மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் கப்பல் சண்டைகள் எவ்வாறு எடுக்கப்பட்டது என்கிற மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கியிருக்கிறது. முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அன்று திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியானது. படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவே கருத்து தெரிவித்தனர். ஆனால் இதை நாவலாக படித்தவர்கள் சிலர் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்ற குறையை வெளிப்படுத்தி இருந்தனர். நாவல் படிக்காத பலருக்கும் இந்த படம் மிகவும் பிடித்திருந்தது என்று சொல்ல வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படம் வெளியாகி வசூலை வாரி குறித்து இருந்தது. தமிழகத்தில் மட்டும் வெளியான சில நாட்களில் 100 கோடிக்கும் அதிகமான வசூலை கொடுத்திருந்தது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி இருந்ததால் முதல் பாகம் மட்டும் 500 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து இருந்தது. இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். முதல் பாகத்தின் ட்ரைலர், டீசர், பாடல்கள் என அனைத்துமே வெற்றி பெற்று இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது பாகம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், மணிரத்தினம் ஆகியோர் இந்தியா முழுவதற்கும் டூர் சென்றிருக்கின்றனர். மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொச்சின், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் பிரமோஷன் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.
இந்த நிலையில் முதல் பாகத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடுக்கடலில் வந்திய தேவனும் அருள்மொழி வர்மனும் எதிரிகளுடன் கடுமையான சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். அப்போது புயலால் மின்னல் தாக்கி கப்பல் உடைந்து அருள்மொழி வர்மர் மற்றும் வந்திய தேவன் இருவரும் கடலில் விழுகின்றனர். இலங்கை தீவில் இருக்கும் ஊமை ராணி அருள்மொழி வர்மனை காப்பாற்ற குதிப்பது போன்ற சுவாரசியத்துடன் அந்த முதல் பாகம் முடிந்து இருந்தது. ஊமைப் ராணி, தஞ்சாவூரில் இருக்கும் நந்தினி போன்ற உருவத்தைக் கொண்டிருந்ததால் பலருக்கும் அவர் யார் என்று சுவாரஸ்யம் அதிகமாகி இருக்கிறது. இந்த சுவாரசியத்தை இரண்டாம் பாகத்தில் உடைப்பார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில் நடுக்கடலில் ஜெயம் ரவியும் கார்த்தியும் சண்டை போடும் காட்சிகளை எவ்வாறு எடுத்தனர் மேக்கிங் வீடியோவை தற்போது படக் குழு தற்போது வெளியிட்டிருக்கின்றனர். இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த காட்சிகளில் நடித்திருக்கின்றனர்.! நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Sun Tv