Categories: உலகம்

போராட்டத்தில் குதித்த ஈரான் மக்கள்

உக்ரைன் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து ஈரான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமெரிக்கா ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 8-ம் தேதி புறப்பட்டு சென்ற உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான போயிஸ் ரக விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் சுமார் 180 பேர் பலியாகினர்.

Plane clash at iran
சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்

இந்த விபத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா கனடா போன்ற நாடுகள் இந்த தாக்குதலை நடத்தியது இறந்தான் என திட்டவட்டமாக கூறியன. முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் பிறகு மனித தவறுகளால் நடந்த விபத்து என ஒப்புக் கொண்டது.

இந்த விமான விபத்தில், 87 ஈரானிய மக்கள் பலியானார்கள். 63 கனடா மக்கள் பலியானார்கள். 11 உக்ரைன் மக்கள் பலியானார்கள். இதில் ஈரான் தங்கள் சொந்த நாட்டு மக்களையும் கொன்று குவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஈரான் மக்கள்

சொந்த நாட்டு மக்களையே சுட்டு வீழ்த்திய ஈரான் அரசை கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரான் தலைமை தலைவர் அலி கமானி, அதிபர் ஹசன் ரவுஹானி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்