நிதிப்பற்றாக்குறை கை மீறிவிட்டது!

தற்போது இந்தியாவில் நிதிப்பற்றாக்குறையானது எல்லையை மீறி விட்டது பொருளாதாரம் பற்றி நோபல் பரிசினை பெற்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

குறைவான முதலீடு, கிராமப்புற மக்களிடம் குறைந்துள்ள நுகர்வு தன்மை போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. அதேவேளையில், கார்ப்ரேட் வரி குறைப்பால் இந்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் பாதிக்கப்படும்.

விளம்பரம்
நிதிப்பற்றாக்குறை கை மீறிவிட்டது! 1
அபிஜித் பானர்ஜி

இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.6 – 3.85% உயரும் என்றும் சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதுகுறித்து பொருளாதார அறிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான அபிஜித் பானர்ஜி, நாட்டின் நிதிப்பற்றாக்குறையானது ஏற்கனவே எல்லை மீறிவிட்டது. ஆக மேலும் அதனை நெருக்க நினைக்க வேண்டாம். வரவிருக்கும் பட்ஜெட்டுக் நிதி இறுக்க நடவடிக்கைகளை இணைக்க நான் பரிந்துரைக்க மாட்டேன்.

விளம்பரம்

தொடர்ச்சியான மந்த நிலைக்கு மத்தியில் பிப்ரவரியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது

அரசு கடந்த 2019 – 20ம் ஆண்டில் நிதிபற்றாக்குறையானது 3.3%மாகவும் இலக்கு வைக்கப்பட்டது. இது முந்தைய ஆண்டில் 3.4% இருந்தது கவனிக்கதக்கது.

விளம்பரம்
தொடர்புடையவை  கார்ப்ரேட் ஊழல்: விசாரணையில் எடல்வைஸ்

மத்திய அரசு ஏற்கனவே கல்விக்கு குறைவான நிதி தான் ஒதுக்கி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் 3,000 கோடி ரூபாயாக குறைக்கும் திட்டம் பற்றி பேசிய பானர்ஜி, கல்வி என்பது ஒரு மாநிலத்தின் பொருள். இதில் குறைப்பது கடலில் ஒரு துளி போல என்றும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Leave a Comment