விஜய் டிவி பிரபலம் புகழுக்கு பிறந்த குழந்தை.! புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்த புகழ்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் புகழ். தற்போது இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். விஜய் டிவியின் தவிர்க்க முடியாத ஒரு நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார் புகழ். ஆரம்பத்தில் பெண் வேடங்களில் மட்டுமே நடித்து வந்த இவருக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் புகழுக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு பிறந்த குழந்தை.! புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்த புகழ்.! 1

 

அஜித்துடன் இணைந்து வலிமை, சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, அயோத்தி, ஆகஸ்ட் 16, 1947 போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் ஹீரோவாக நடிக்கும் ஜூ கீப்பர் திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இவருக்கும் இவரது காதலியான பென்சிக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இஸ்லாமியரான பென்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார் புகழ்.


பெரியார் படிப்பகத்தில் வைத்து ஏற்கனவே பென்சியை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்த அவர், பின்னர் குடும்பத்தினர் வற்புறுத்தலால் இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்திருந்த அவர், பென்சிக்கு பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு நடத்தியிருந்தார். இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று புகழுக்கு குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அறிவித்திருக்கிறார்.

குழந்தையின் கால்களை பிடித்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்த அவர், “இருமுறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய். என் மகள், மகள் அல்ல எங்கள் மகாராணி பிறந்திருக்கிறார். என் மகளே..! தாயும் சேயும் நலம் என்று பகிர்ந்து இருக்கிறார். பலரும் புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்