விஜயகாந்த் போலவே தானும் இனி அலுவலகத்தில் மதிய நேரங்களில் சாப்பாடு போட போவதாக சின்னத்திரை நடிகர் புகழ் அறிவித்திருக்கிறார். கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அவரின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம், அரசியல் உலகம் என அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் பலரும் உணவு உண்ண வேண்டும் என்பதற்காக இலவசமாக உணவு கொடுக்க ஆரம்பித்தார். பின்னாளில் அதுவே வழக்கமாகி போனது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்குவதும், ஆதரவு இல்லாமல் தவிக்கும் மக்கள் வாழும் இல்லங்களுக்கு தொண்டுகள் செய்து வருவதுமாக இருந்து வந்தார் விஜயகாந்த். இப்படி மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மனிதர் டிசம்பர் 28ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக காலமாகி இருந்தார். அவரின் மரணச் செய்தி ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கட்சி சாராத பொதுமக்கள் பலரும் திரண்டு வந்து கேப்டன் இறுதிச்சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவர் இறந்து எட்டு நாட்கள் ஆன பின்னரும் தேமுதிக அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியும், சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றும் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சின்னத்திரை பிரபலம் புகழ் ஆகிய அனைவரும் கேப்டன் நினைவிடத்தில் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின்னர் புகழ் அளித்த பேட்டியில், “கேப்டன் விஜயகாந்த் செய்தது போலவே இனி தானும் ஏழைகளுக்கு உணவளிக்க போவதாகவும் தனது அலுவலகத்தில் இனி மதிய நேரங்களில் 50 பேருக்கு உணவு வழங்கப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். நீங்களும் அவர் அளித்த முழு பேட்டியைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O