ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள அருண் விஜயின் ‘மிஷன் சாப்டர் 1’ படத்தின் ட்ரைலர் வெளியானது.!

இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் ‘அச்சம் என்பது இல்லையே – மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழ் உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது ஏ.எல் விஜய்யின் இயக்கத்தில் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் வருகிற ஜனவரி 12ம் தேதி பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று ட்ரெய்லர் வீடியோ வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் 1' படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. தனது மகளின் மருத்துவத்திற்காக லண்டன் செல்லும் ஒரு தந்தை அங்கு சந்தேகத்தின் பெயரில் சிறையில் மாட்டிக் கொள்கிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? அவரது மகளுக்கு மருத்துவம் முடிந்ததா? இல்லையா? அவர் சிறையில் இருந்து எப்படி தப்பி வந்தார்? என்பது குறித்த ஹாலிவுட் தரத்தில் அமைந்திருக்கும் திரைப்படம் தான் ‘மிஷன் சாப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே’. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “பாவ மன்னிப்பு கேட்பதற்கு இது ஒன்றும் சர்ச் கிடையாது..” போன்ற வசனங்கள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன.

விளம்பரம்
தொடர்புடையவை  பேரன் பேத்திகளுடன் விடுமுறையை தீவில் கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்..! வைரலாகும் புகைப்படங்கள்

ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள அருண் விஜயின் 'மிஷன் சாப்டர் 1' படத்தின் ட்ரைலர் வெளியானது.! 3
சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் ட்ரெய்லரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Lyca Productions

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment