4 மணி நேரமாக காந்தாரா வேடம் போட்ட புகழ்.! மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்டு புகழ் உருக்கம்.!

வெளியிட்டது

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக புகழ் தற்போது காந்தார படத்தில் வரும் பஞ்சுருளியாக மாறி மேக்கப் போட்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுடன் அவர் உருக்கமான பதிவு ஒன்றையும் போட்டு இருக்கிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சற்றே வித்தியாசமான ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த நிகழ்ச்சியில் சுட்டித்தனங்கள் நிறைந்த ஒருவரை கோமாளி என்கிற பெயரில் வைத்துக்கொண்டு சமைக்கும் சமையல் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. மூன்று சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது நான்காவது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதில் பழைய கோமாளிகளாக இருந்த புகழ், சுனிதா, குரேஷி, மணிமேகலை ஆகிய நான்கு பேர் மட்டுமே தொடர்கின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலா கோமாளியாக வரவில்லை. மேலும் சிவாங்கி கோமாளியில் இருந்து குக்காக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். புதிய கோமாளிகளாக ஜிபி முத்து, சிங்கப்பூர் தீபன், மௌனராகம் சீரியல் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்ற பலரையும் உள்ளே இறக்கி இருக்கின்றது குக் வித் கோமாளி டீம். மேலும் 10 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

4 மணி நேரமாக காந்தாரா வேடம் போட்ட புகழ்.! மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்டு புகழ் உருக்கம்.! 1
அதில் மேகா படத்தின் ஹீரோயின் சிருஷ்டி டாங்கே. வலிமை படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பன், பிக் பாஸ் சீசன் 3 பிரபலம் ஷெரின் ஷிருங்கர். ரஜினியுடன் முத்து படத்தில் நடித்திருந்த விசித்ரா, நாய் சேகர் படை இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் எழில், மதுரை காளையன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியன், மைம் என்னும் கலையில் கோல்ட் மெடல்லிஸ்ட் ஆக இருக்கும் கோபிமற்றும் சிவாங்கி ஆகிய 10 பேர் குக்குகளாக களம் இறங்கியிருந்தனர். இதில் நாய் பட சேகர் கிஷோர் கடந்த வாரம் எலிமினேட் செய்ய செய்து வெளியே அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது. அதில் திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படங்களின் வரும் கெட்டப்புகளை கோமாளிகள் போட்டிருந்தனர். அதில் புகழ் காந்தாரவாக மாறி பஞ்சுருளி வேடம் அணிந்து இருந்தார். அதைப் பார்த்த பலரும் புகழை வெகுவாக பாராட்டி வந்தனர். மக்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள் என்று புகழுக்கு ஆதரவாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர். இந்த நிலையில் புகழ் தனது சமூக வலைதள பக்கத்தில் காந்தாரா மேக்கப் போட்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர், இந்த கெட்டப் போடவே எனக்கு 4 மணி நேரம் ஆச்சு. மாபெரும் வெற்றியை இந்த படம் அடைய இதில் உள்ள வேலைப்பாடுகளும் ஒரு காரணம்னு இப்பத்தான் புரியுது.

மிகப்பெரிய கலைநயத்தோடு எனக்கு மேக்கப் போட்டு கொடுத்த மேக்கப் மேனுக்கு நன்றி. இந்த படத்தின் மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி. அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கேன்னு நினைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அனைத்து பஞ்சுருளி தெய்யம் நடன கலைஞர்களுக்கும்…என் உயர்வுக்கு ஏணியாய் இருந்து எனக்கு ஆதரவு அளித்து வரும் என்னுயிர் ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்… என்று பதிவிட்டு இருக்கிறார். புகழின் இந்த பதிவிற்கு கீழே பலரும் உங்களுடைய கடின உழைப்புக்கு நன்றி, மக்களை மகிழ்விப்பதற்காக நீங்கள் செய்த இந்த செயலை நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சிவாங்கி, வாணி போஜன், ஸ்ருதிஹா, தர்ஷா குப்தா, சக்தி, தமிழ் ரித்திகா, அசார் போன்ற விஜய் டிவி பிரபலங்கள் பலரும் புகழை வாழ்த்தி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்