ராஜா ராணி தொடரில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ரித்திகா. பின்னர் பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்ததன் மூலம் அந்த சீரியலில் நடித்து பலராலும் அறியப்பட்டவர் ஆகியுள்ளார் இவர். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. பாக்கியலட்சுமி தொடருக்கு பின்னர் இவரது இயற்பெயரை மறந்து அனைவரும் அமிர்தா என்று தான் அழைத்து வந்தனர். அந்தளவிற்கு தனது நடிப்பால் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்து விட்டார் ரித்திகா.

சீரியலில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் போட்டியாளர் ஆக கலந்துகொண்டு கலக்கி இருந்தார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டையை கிளப்பி இருந்தார் ரித்திகா. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து யாரும் எதிர்பாராத விதமாக ரித்திகா வெளியேறினார்.

பின்னர் வினு என்பவரை திருமணம் செய்துகொண்ட ரித்திகா பாக்கியலட்சுமி தொடரை விட்டு வெளியேறினார் . தற்போது கர்ப்பமாக இருக்கும் அவருக்கு நேற்று கோலாகலமாக வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது. பல சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ரித்திகாவிற்கு வளையல் அணிந்து அவரை மனதார வாழ்த்தி உள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
