சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இப்பொது மக்கள் மத்தியில் செலிபிரிட்டி அந்தஸதை பெற்றுள்ள இவர் சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றிற்கு கலந்துகொண்டார். அந்த குக் கோமாளி நிகழ்ச்சியின் மிக முக்கிய அடையாளமாக இப்பொது இருக்கும் சிவாங்கிக்கு அந்த நிகழ்ச்சியில் மிக முக்கிய உறுதுணையாக இருப்பவர் காமெடி நடிகர் புகழ்.
விஜய் டிவியின் இப்போதைய முன்னணி காமெடி நடிகர் இவரே. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் முதல் முறையாக விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்த இவர், பிறகு ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது விஜய் டிவி நிறுவனம். அதுவே அந்த நிகழ்ச்சியின் மிக பிரியா வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தது.
விஜய் டிவியின் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற இவர், மெல்ல மெல்ல திரையுலகிலும் தன்னுடைய பதிவை வெளிப்படுத்தி வருகிறார். அஜித்துடன் வலிமை, அண்மையில் வெளியான ஆர்.ஜே.பாலாஜியின் “வீட்ல விஷேசங்க” என வெளிவரும் படங்களில் தோன்றி ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளார். அது போக இன்றளவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இவரே இப்போதைய மிக முக்கிய காரணமாகவும் இருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியின் வாயிலாக சிவாங்கியும், புகழும் மிக நெருக்கமான பந்தத்தை ஏற்படுத்துக்கொண்டுள்ளனர். கோமாளிகளாக அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துவரும் இருவரும் விஜய் டீவியை தாண்டியையும் நல்ல பழக்கத்தை உண்டாக்கிகொண்டுள்ளனர். இதற்காக அவ்வப்போது வெளி நிகழ்ச்சியில் பாடி வரும் சிவாங்கி, இப்பொது அண்மையில் அதே போன்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கெடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்காக பாடகராக மாறியுள்ளார் புகழ். “தென்றல் வந்து தீண்டும் போதும்” பாடலுக்கு இருவரும் ஒன்றாக பாடியுள்ள இந்த வீடியோ இப்பொது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Video Courtesy – ViralVideos