நம்ம பிக்பாஸ் குயின்சியா இது? நடுரோட்டில் ஆண்களுடன் மரண குத்தாட்டம் போட்டுள்ள குயின்சி

வெளியிட்டது

பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள குயின்சி, குலசை தசரா விழாவில் நடனமாடும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இதன் சீசன் 6 தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக பங்கெடுத்து உள்ளவர்தான் குயின்சி ஸ்டான்லி. கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த இவர் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். மேலும் ஆல்பம் சாங்ஸ், கவர் சாங்ஸ் போன்றவையும் செய்து வருகிறார். அன்பே வா போன்ற சீரியல்களிலும் குயின்சி நடித்திருக்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

நம்ம பிக்பாஸ் குயின்சியா இது? நடுரோட்டில் ஆண்களுடன் மரண குத்தாட்டம் போட்டுள்ள குயின்சி 1

தமிழில் கருப்பு கண்ணாடி என்கிற படத்தில் முதல் முறையாக நடித்து உள்ளார். அடுத்ததாக விடியும் வரை காத்திரு என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படங்கள் வெளியாக தயார் நிலையில் இருக்கிறது. குயின்சிக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் மட்டும் 75 ஆயிரம் பின் தொடர்பவர்களை வைத்திருக்கிறார் குயின்சி. பிக்பாஸ்க்கு பின்னர் அவரது செல்வாக்கு சற்று அதிகரித்து இருக்கிறது. குயின்சி பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு அவரிடம் அசல் கோளாறு நடந்து கொள்ளும் முறை குறித்து பலரும் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் குயின்சியை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் பலரிடமும் இருந்து வருகிறது. இவர் ஆரம்பத்திலேயே ஒரு நடன கலைஞராகவும் இருந்திருக்கிறார். இவர் தற்போது குலசை தசரா விழாவிற்காக தூத்துக்குடிக்கு சென்று, அங்கு நடனக் குழு உடன் இணைந்து நடுரோட்டில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. பொதுவாகவே குலசை தசரா விழாவிற்காக இது போன்ற மாடல்கள் சென்று நடனம் ஆடுவது வழக்கம். அந்த வகையில் குயின்சியின் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

YoVideo Video Code Embed Credits: kulasai dasara videos.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்