Categories: சினிமா

வெறித்தனமாக தயாராகியுள்ள விக்ரம் படம்!!அடுத்த மேக்கிங் ப்ரோமோ வீடியோ வெளியீடு.

வெளியிட்டது

இப்பொது மொத்த தமிழ் சினிமாவின் கவனத்தையும் ஈர்த்துவைத்துள்ள படம் ‘விக்ரம்”. 4 ஆண்டுகள் பின் திரைக்கு திரும்பும் கமல், மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கம், வெறியேற்றும் அனிருத்தின் இசை, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என இருபெரும் நடிப்பு அரக்கர்கள் என படத்தின் அனைத்துமே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2 வாரங்கள் முன்பு வெளியான பாடல்களும், ட்ரைலரும் ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் கிளப்பியது. படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் வேலைகள் மிக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

வெறித்தனமாக தயாராகியுள்ள விக்ரம் படம்!!அடுத்த மேக்கிங் ப்ரோமோ வீடியோ வெளியீடு. 1

நடிகர் கமலின் அதிதீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், நான் கமலை பார்த்து தான் சினிமாவை கற்று கொண்டேன், அவரை பார்க்கவே சென்னைக்கு வந்தேன், இப்பொது அவருடன் படம் புரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது ஒரு மிக பெரிய வாய்ப்பு, நான் சரியாக பயன்படுத்தி கொள்வேன்” என கூறி இன்னும் ரசிகர்ளுக்கு எதிர்பார்ப்பி கூட்டியுள்ளார்.

இப்போது படத்திலிருந்து மேக்கிங் வீடியோ வெளியாகி உள்ளது. படத்தில் கமலிற்கு அவர் சொல்லிக்கொடுப்பதும், ஃபகத் ஃபசில், விஜய் சேதுபதியுடன் இருப்பது என பல்வேறு வகையான மேக்கிங் வீடியோ இப்பொது வெளியாகியுள்ளது.

கமல் நடித்த “விக்ரம்’ படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு, இந்த படம் உருவாகியுள்ளது என கூறப்படுகிறது. 1986 ஆம் வெளியான அந்த படம் வெறும் 1 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு 8 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இப்பொது இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியான நிலையில் ரசிகர்களுக்கு இன்னும் எதிர்ப்பரப்பு அதிகரித்துள்ளது. கமலும் சென்னை, ஹைதராபாத், மும்பை,மலேஷியா என பறந்து பறந்து ப்ரோமோஷன் செய்து வருகிறார்.

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். அடுத்து வெளிவரவுள்ள “கைதி 2” படத்திற்கும், அடுத்த “விக்ரம் 3” பாடதிக்ரும் இணைப்பாக அவர் இந்த கதையில் தோன்றவுள்ளார், என்பது ஏற்கனவே வெளியாகி உள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்