“சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்”!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!!

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 1

தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த சினிமா கலைஞர் கமல்ஹாசன் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்காது. 1970’களில் தன்னுடைய ஆளுமையை துவங்கிய கமல் இப்போதும் இந்திய அளவில் மிக முக்கியமாக பார்க்கப்படும் நடிகராக வளம் வருகிறார். 2 வயதிலேயே சினிமாவிற்குள் வந்த கமல், ஏற்கனவே 60 ஆண்டுகள் இந்த துறையில் கடந்து இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இவருடன் அறிமுகமான, இல்லை இவருக்கு பின்னால் அறிமுகமான நடிகர்கள் பலரும் இப்பொது சினிமாவில் இருந்து மறைந்து போகவே, ஆனால் எவ்வளவு பெரிய தோல்விகள் ஆயினும், அதனை தன்னுடைய படங்கள் மூலம் கடந்து வருகிறார்.

விளம்பரம்

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 3

இந்திய அளவில், 5 மொழிகளில் நடித்து 5 மொழிகளுக்குமே பிலிம் பேர் விருது வாங்கிய ஒரே நடிகர் இவரே. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் மிக பெரிய வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் கே.பாலச்சந்தரால் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட கமல் அன்று முதல் இன்று வரை இந்தியாவிலுள்ள ஆகா சிறந்த இயக்குனர்கள் பலருடனும் பணியாற்றியுள்ளார். நடிகராக 4 தேசிய விருது, தயாரிப்பாளராக 1 தேசிய விருது, 19 பிலிம் பேர், 10 தமிழக அரசு விருது, 5 நந்தி விருது மட்டுமின்றி அனைத்துவகையிலான உயரிய விருதுகளை இவர் வென்று குவித்துளளார். இவரே கூறியதாலேயே இவருக்கு பிலிம் பேர் விருதுகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.

விளம்பரம்
தொடர்புடையவை  கணவருடன் வெளிநாட்டிற்கு ஹனிமூனுக்கு சென்ற ஹன்சிகா.! வெளியான அழகிய புகைப்படங்கள்.!

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 5

நடிகர் மட்டுமின்றி, இயக்குனராக, தயாரிப்பளராக, எழுத்தாளராக, நடன இயக்குனராக, பாடகராக, பாடலாசிரியராக என சினிமாவிலுள்ள அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர். இவருடைய படங்களை ஆஸ்கார்கும் அனுப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவலாகும். இந்த தலைமுறை கொண்டாட தவறிய கமல்ஹாசனை அவரின் மிக தீவிர ரசிகராக உள்ள இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அண்மையில் வெளியான “விக்ரம்” படத்தின் மூலம் மிக பெரிய அளவில் கொண்டாட வைத்துள்ளார்.

விளம்பரம்

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 7

கடந்த சில ஆண்டுகளாகவே மிக பெரிய வெற்றிக்காக காத்திருந்த கமல், இந்த படத்தின் மூலம், இது வரை தமிழில் வெளியாகி வசூல் எடுத்த அணைத்து படங்களின் வசூலையும் 3 வாரங்களிலேயே முறியடித்து முதல் இடத்தில் உள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபசில், சூர்யா, நரேன் என பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் மட்டுமின்றி மீண்டும் இந்திய அளவில் கமலை உற்றுநோக்க வைத்துள்ளது.

விளம்பரம்

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 9

இதற்கு நடுவில் மிகவும் நார்த்தீகவாதியான கமலிற்கு ரசிகர்கள் கோவில் கட்டி வருகிறார்கள். கடவுளே இல்லை என கூறும் நடிகர் கமலிற்கே ரசிகர்கள் கோவில் கட்டுவது மிகவும் ஆச்சரியப்படுத்தும் விஷயமே. ஆனால் இதில் தான் ஒரு மிக பெரிய ட்விஸ்ட் உள்ளது. அது என்னவென்றால், கோவில் இங்கு கட்டப்படவில்லை. கோவில் மேற்குவங்காள மாநிலம், கிதிப்பூர் என்னும் இடத்தில் கட்டப்பட்டு வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  விவாகரத்து செய்த மஞ்சு வாரியர்! எந்தவித விரதமும் இல்லை -நடிகர் திலீப்!!

வருகிற ஆயுத பூஜை தினங்களில் இந்த கோவில் கட்டிமுடிக்கப்படும் எனவும் அதற்காக நடிகர் கமலிற்கு விழா அழைப்பிதழும் அனுப்பப்பட்டுளளதாக ரசிகர் மன்றம் சார்பில் தெரிவிக்கிறார்கள். இதற்கு கமல் என்ன கூறப்போகிறார் என பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும். ஏற்கனவே கொல்கத்தாவில் நடிகர் அமிதாப் பச்சனிற்கு கோவில் கட்டி இருந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

"சாமியே இல்லை என கூறிவரும் கமலை சாமியாகி கோவில் கட்டி வரும் ரசிகர்கள்"!!ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு!! 11

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment