ரட்சிதா கொடுத்த பார்ட்டியில் மரண குத்தாட்டம் போட்ட ஷிவின்.! ஷிவினுக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்த ரச்சு.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற ஷிவினை செண்டை மேளங்கள் முழங்க வரவேற்று அழைத்துச் சென்று, ஷிவினின் நண்பர்களை அழைத்து கேக் வெட்டி மிக பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார் ரட்சிதா மகாலட்சுமி. சீசன் 6ல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ஷிவின் கணேசன். பொறியியல் படித்திருக்கும் இவர், தான் ஒரு திருநங்கையாக மாறியபோது இங கு இருந்தால் உறவினர்களால் அவமானப்படுத்தப்படுவோமோ என்று சொல்லி சிங்கப்பூருக்கு அவரது தாயாரால் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சென்று சிவில் இன்ஜினியரிங் வேலை பார்த்து வந்த அவர், ஒரு கட்டத்தில் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பினார். ஆனால் அவரது தாயாரோ அவரது அக்காவும் அவரை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. தனியாக வசித்து வந்த ஷிவின், தனியார் கம்பெனிகளில் வேலை பார்த்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இது மட்டுமல்லாமல் மாடல் ஆக வேண்டும் என்ற ஆசையினால் போட்டோ ஷூட்டுக்கள் நடத்தி அதை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வந்தார் ஷிவின். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரட்சிதா கொடுத்த பார்ட்டியில் மரண குத்தாட்டம் போட்ட ஷிவின்.! ஷிவினுக்கு செம்ம சர்ப்ரைஸ் செய்த ரச்சு.! 1

பின்னர் அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் ஆசை வரவே பிக்பாஸின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டார். நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றதால் சீசன் 6 போட்டியாளராக அடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் முதல் வாரத்தில் ஷிவினிடம் யாருமே சரியாக பேசவில்லை. தனியாகவே இருந்து வந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் ஷிவினுடன் அனைவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவருடனும் சகஜமாக கலந்து பேசி பழகி மிக நண்பராகிவிட்டார். வெளியில் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஷிவினை ஏற்றுக் கொண்டது பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. குறிப்பாக ரட்சிதா மகாலட்சுமி – ஷிவின் இருவருக்கிடையில் இருந்த நட்பு பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது. இவர்கள் நண்பர்கள் என்பதைத் தாண்டி அக்கா தங்கை உறவு போலையே மாறிவிட்டார்கள். ஒரு திருநங்கையை இப்படித்தான் பார்க்க வேண்டும், பழக வேண்டும் என்கிற கண்ணோட்டத்தை ரட்சிதா இந்த நிகழ்ச்சியின் மூலமாக முற்றிலுமாக மாற்றி இருந்தார்.


ரட்சிதாவின் தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பொழுது கூட இதே கருத்தை தான் சொல்லியிருந்தார். ரட்சிதாவும் ஷிவினும் பார்ப்பதற்கு அக்கா தங்கைகள் போல் இருப்பதாக கூறியிருந்தார். இந்த நிலையில் 105 நாட்களை முடித்து மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஷிவின் தற்போது வெளியே வந்த அவரை செண்டை மேளங்கள் முழங்க மாலை மரியாதை உடன் ஊர்வலமாக அழைத்து வந்தார் ரட்சிதா. பின்னர் ஒரு இடத்தில் கேக் வெட்டி, நண்பர்களை அழைத்து ஷிவினுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் ரட்சிதா. அந்த வீடியோவை ஷிவின் தற்போது தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Code Embed Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்