எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.! Biggboss-ல் இருந்து வெளியேறிய பின்பு ரட்சிதா போட்ட முதல் பதிவு

வெளியிட்டது

பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின்பு ரட்சிதா மகாலட்சுமி தற்போது instagram-ல் முதல் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் தனக்கு இத்தனை நாள் வாக்களித்து தன்னைக் காப்பாற்றிய மக்களுக்கு அவர் நன்றி சொல்லி இருக்கிறார். பிக்பாஸில் ஒரு முக்கியமான போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் ரட்சிதா மகாலட்சுமி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நாடகங்களில் முன்னணி நடிகையாக நடித்திருக்கிறார். விஜய் டிவியின் ஆரம்பகால வெற்றிக்கு இவரும் ஒரு பங்களிப்பை கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. அதன்படி இவர் பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி பாகம் 2, பாகம் 3, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இதனால் ரட்சிதாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இந்த நிலையில் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ல் ஒரு போட்டியாளராக ரட்சிதா மகாலட்சுமி கலந்து கொண்டார்.

எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.! Biggboss-ல் இருந்து வெளியேறிய பின்பு ரட்சிதா போட்ட முதல் பதிவு 1
ரட்சிதா மகாலட்சுமியை வெளியில் இருந்து பார்க்கும் பொழுது மிகுந்த கடினமானவர் என்ற தோற்றமே இருக்கும். ஆனால் வீட்டிற்கு உள்ளே சென்ற ரட்சிதா மிகவும் பொறுமையை கையாண்டார். எந்த இடத்திலும் அவர் நிதானத்தை இழக்கவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்து வந்தார். இது வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ரட்சிதா தான் சண்டை போடுவார், அவரால் இந்த வீட்டில் பல சண்டைகள் வரும் என்று எதிர்பார்த்து வந்த ஹவுஸ் மேட்சுக்கும் இது புதிதாக இருந்தது. ரட்சிதா எந்த இடத்திலும் சண்டை போடவில்லை. இன்னும் சொல்லப்போனால் தனக்கு தேவையான இடத்தில் கூட அவர் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டார். இது பார்க்கும் பார்வையாளர்களுக்கும் சிறிது சுவாரஸ்யமின்மையை ஏற்படுத்தியது. இதனால் இந்த வாரம் நாமினேஷனில் ரட்சிதாவை குறைந்த வாக்குகள் அளித்து மக்கள் வெளியேற்றி விட்டனர்.


வீட்டை விட்டு வெளியேறும் போது ரட்சிதா கண்கலங்கி பேசுனார். இதுதான் நான், என்னை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருப்பீர்கள் அந்த ரட்சிதா இப்போது கிடையாது நான் வெகுவாக மாறிவிட்டேன் என்று கண் கலங்கி கூறியிருந்தார். மேலும் வெளியே வந்த பின்னர், உங்களின் வெளியேற்றம் தவறான முடிவு, நீங்கள் வெளியேறியது சரியில்லை, நீங்கள் பலரின் உள்ளங்களை வென்று இருக்கிறீர்கள் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரட்சிதா தற்போது பிக்பாஸில் தான் இருந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார். அதில் அவர் என்னுடைய பயணத்தில் இதனால் வரை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் இல்லை என்றால் நான் இதை செய்திருக்க முடியாது. உண்மையிலேயே நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர். உங்களுடைய எல்லை கடந்த, அளவற்ற அன்பிற்கு மிகவும் நன்றி என்று அவர் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்