இந்த ஈஸ்வரியை விட்டுட்டு போக உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு? கனிகா வெளியிட்ட வீடியோ.!

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று எதிர்பாராத விதமாக மரணம் அடைந்திருந்த நிலையில், தற்போது கனிகா புது வீடியோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். தேனி மாவட்டத்திலிருந்து படங்கள் இயக்கும் ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து ஹோட்டல்களில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மாரிமுத்து. அவருக்கு இருந்த இலக்கிய ஆர்வத்தைப் பார்த்த வைரமுத்து அவரிடம் உதவியாளராக பணியாற்ற வேலைப் போட்டு கொடுத்துள்ளார். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறைக்கு சென்ற அவர் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டினார். அவர் இயக்கிய படங்கள் பெரிய அளவில் கை கொடுக்காததால் நடிப்பு பக்கம் தனது கவனத்தை திருப்பினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஈஸ்வரியை விட்டுட்டு போக உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு? கனிகா வெளியிட்ட வீடியோ.! 1

விளம்பரம்

படங்களின் நடித்திருந்த போதிலும் அவருக்கு எதிர்நீச்சல் சீரியல்தான் மிகப்பெரிய வரவேற்பையும் திருப்புமுனையையும் கொடுத்தது. இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு டப்பிங் பேசுவதற்காக ஸ்டுடியோவிற்கு சென்ற அவருக்கு மாரடைப்பை ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார். இந்த செய்தி எதிர்நீச்சல் சீரியல் மட்டுமல்லாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என பலரையும் உலுக்கி இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் அவருக்கு சீரியலில் மனைவியாக நடித்து வரும் கனிகா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் கொஞ்சம் கூட ஓய்வே எடுக்காமல் உழைப்பு, உழைப்பு என்று சொல்லி அவர் ஹார்டுவொர்க் பண்ணி விட்டாரோ என்று தோன்றுகிறது.

தொடர்புடையவை  18 வருடங்களுக்கு பிறகு ராதிகா இயக்க உள்ள புது நடத்தில் நடிக்க வரும் சந்திரமுகி பொம்மி.!

இந்த ஈஸ்வரியை விட்டுட்டு போக உங்களுக்கு எப்படி சார் மனசு வந்துச்சு? கனிகா வெளியிட்ட வீடியோ.! 3

விளம்பரம்

நீங்கள் நினைப்பது போல அவர் கடுமையான மனிதர் கிடையாது. பெண்களுக்கு அவ்வளவு சுதந்திரம் கொடுப்பார். என்னை எப்பொழுது சந்தித்தாலும் கனி மா எப்படி இருக்கிற? வீட்டில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அன்புடன் விசாரிப்பார். பெண்களை அவ்வளவு மதிப்பார். இன்று எதிர்நீச்சல் ஷூட்டிங் இருந்த காரணத்தினால் நாங்கள் அனைவரும் மேக்கப் போட்டுக் கொண்டிருந்தோம். அப்போது மாரிமுத்து சார் இறந்து விட்டதாக சொன்னதை தன்னால் இப்பவும் நம்ப முடியவில்லை. அவரது ஆத்மா எங்கிருந்தாலும் நிம்மதியாக இருக்கட்டும் என்று கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sun News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment