நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில் தான் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க போக இருப்பதாக அவர் சூசகமாக அறிவித்திருக்கிறார். இதனால் அவர் மீண்டும் தனது கணவருடன் இணைந்து வாழப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலமாக தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி பெங்களூருவை சேர்ந்த இவர் நடிகர் தினேசை திருமணம் செய்து கொண்டே சென்னைக்கு குடி பெயர்ந்தார். பின்னர் பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்தார் அதன் பின்னர் சரவணன் மீனாட்சி பாகம் ஒன்று இரண்டு ஆகியவற்றிலும் அவர் நடித்தார். இந்த தொடர்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்து இருந்தது. இதன் பின்னர் ரட்சுதாவுக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது.

பின்னர் ரட்சிதா மகாலட்சுமி அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் என்கிற சீரியலின் நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் இந்த சீரியலில் தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்று சொல்லி கலர்ஸ் தொலைக்காட்சிக்கு சென்ற அவர் சொல்ல மறந்த கதை என்கிற ஒரு சீரியலில் வக்கீலாக நடித்துக் கொண்டிருந்தார். பின்னர் சில காரணங்களால் அந்த தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு வந்த ரட்சிதா மகாலட்சுமி பிக் பாஸில் கலந்து கொண்டார். இதற்கிடையில் அவர் தனது கணவர் தினேஷுடன் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் இருந்த கணவருடன் இருந்த புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருந்தார். அதேபோல் தினேஷும் ரட்சிதாவுடன் இருந்த புகைப்படங்களையும் நீக்கி இருந்தார். தினேஷுக்கு சரியான வேலை இல்லை என்றும், திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்றும் அதனால் தான் தினேஷிடம் பிரிந்து இருப்பதாகவும் தகவல்கள் கொடி கட்டி பறக்க தொடங்கின.
பிக்பாசில் இருந்த போது இதை உறுதிப்படுத்தும் விதமாக ரட்சிதா மகாலட்சுமி ஒருமுறை தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை, திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது, இனியும் எனக்கு குழந்தை பிறக்குமா தெரியவில்லை என்று சொல்லி கதறி அழுதிருந்தார். மேலும் தான் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க போவதாகவும் பிக் பாஸில் இருந்த போது அறிவித்திருந்தார். இந்த நிலையில் மும்பை நீதிமன்றம் தற்போது புதிய தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. அதில் தனியாக வாழும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று புதிய தீர்ப்பு ஒன்றை கொடுத்திருக்கின்றனர். இந்த தீர்ப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரட்சித்த மகாலட்சுமி இது போதும், இங்கிருந்து தொடங்கப் போகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக அவர் இனி கணவருடன் சேரப்போவதில்லை என்பதையும், குழந்தையை தத்தெடுத்த வளர்க்கப்போகும் செய்தியையும் உறுதிப்படுத்தி இருப்பதாகவே தெரிகிறது.