இன்னும் எவ்ளோ தான் இவுங்களும் கஷ்ட பாடுவாங்க!!!மழையில் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி கீழே விழுந்த ரஷிதா!!!

வெளியிட்டது

முன்னர் சீரியல் என்றால் சன் டிவி தான். சிங்ரம நடிகைகள் கூட வாய்ப்பு குறைத்தவுடன் சன் டிவியில் தொடர்களில் தோன்றி வெற்றி அடைந்தனர். சில ஆண்டுகள் முன்பு அதனை விஜய் டிவி முறியடித்து இல்லத்தரசிகளின் பிரியமான சேனலாகி இருந்தது. நிறைய நடிகர் நடிகைகள் கொண்ட விஜய் டிவியின் தொடர்கள் பலவும் ரசிகர்களிடம் பிரபலம். இப்பொது விஜய் டிவிக்கு போட்டியாக கலர்ஸ் தமிழ் உருவாகி உள்ளது. விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் அங்கு சென்று கொண்டு இருக்கின்றனர்.

சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பெரிய சின்னத்திரை நடிகையான ரக்ஷிதா  மஹாலக்ஷ்மி, பின் நாம் இருவர் நமக்கு இருக்கார் தொடரில் வந்தார். இப்போது  கலர்ஸ் தமிழில் புத்தம் புது சீரியலாக இது சொல்ல மறந்த கதை ஒளிபரப்பாகி வருகிறது. அதில் நாயகியாக ரக்ஷிதா  மஹாலக்ஷ்மி நடித்து வருகிறார்.

இன்னும் எவ்ளோ தான் இவுங்களும் கஷ்ட பாடுவாங்க!!!மழையில் திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி கீழே விழுந்த ரஷிதா!!! 1

அதில் பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பாலின வேறுபாடுகளை, ஆண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு வேலைக்கு செல்ல வேண்டும், பெண் குழந்தைகள் என்றால் படித்துவிட்டு சமையல் கற்றுக் கொண்டு திருமணம் செய்ய வேண்டும் போன்ற காட்சிகள் எல்லாம் காட்டப்பட்டுள்ளது.

திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் என்று பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது.

இந்த சீரியலில் நாயகனாக விஜய் டிவி ஆபீஸ் சீரியல் விஷ்ணு நடிக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்திருக்கும் சத்யா என்ற தொடரில் விஷ்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர் கலர்ஸ் தொடரில் நடிக்க இருப்பதால் இவர் சத்யா சீரியலில் தொடர்வாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், சத்யா 2 தொடரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் வழுக்கி விழுவது போல் வீடியோ வைரலாகி வருகிறது.இதனை கண்ட இவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மழை செட்டில் இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் நடித்துக்கொண்டிருக்கும் பொழுது திடீரென வழுக்கி விழுந்தார்.

ஆனால், அவர் வழுக்கி விழுந்தாலும் அதை அப்படியே ஷூட்டிங் செய்து சமாளித்து இருக்கிறது சீரியல் குழு. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.சிலர் இதனை ஷூட்டிங் என கூறி வரும் நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த காட்சி சீரியலில் வருமா இல்லயா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Video Courtesy – zero watts

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்