Categories: சினிமா

பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க கிளம்பிட்டானுங்க.! லெஜெண்ட் சரவணனை கழுவி ஊற்றிய ராதா ரவி

வெளியிட்டது

பலவகையான சர்ச்சை கருத்துக்களை கூறி அடிக்கடி பிரச்சனைகள் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளும் நபர்களில் மிக முக்கியமானவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் திமுகவில் இருந்த போது நயன்தாரா பற்றி கூறிய சர்ச்சை கருத்துக்களால் அந்த கட்சியை விட்டே நீக்கப்பட்டார். பின்னர் பல சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது பாஜகவில் இயங்கி வரும் அவர் சமீபத்தில் பாஜக நடத்திய கூட்டம் ஒன்றில், நம் நாட்டில் இரண்டு அக்யூஸ்டுகள் இருக்கிறார்கள். ஒன்று மோடி, இன்னொன்று அமிர்ஷா என்று சொந்த கட்சியின் தலைவர்களையே பற்றி பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். தற்போது இந்த லெஜெண்ட் படத்தின் சரவணன் அருள் பற்றி மறுபடியும் ஒரு சர்ச்சை கருத்தை கூறியிருக்கிறார். நடிகர் ராதாரவி இரவின் நிழல் படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் பார்த்திபனுடன் இணைந்து விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார், அருண் மாதேஸ்வரன் போன்ற பலர் கலந்து கொண்டனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க கிளம்பிட்டானுங்க.! லெஜெண்ட் சரவணனை கழுவி ஊற்றிய ராதா ரவி 1

பார்த்திபன் இயக்கி நடித்த திரைப்படம் தான் இரவின் நிழல். இது கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் சார்ட் படம் என்று பார்த்திபன் கூறி வந்தார். படம் வெளியானது முதலே பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தனர். சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனியாக அழைத்து இந்த படத்தை போட்டு காண்பித்துள்ளார் நடிகர் பார்த்திபன். அப்போது பார்த்திபன் இந்த படத்தின் மூலம் தான் ஒரு டெக்னாலஜி சீனியர் என்பதை நிரூபித்து விட்டார் என்று முதலமைச்சர் வெகுவாக பாராட்டினார். இந்த நிலையில் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் ராதாரவி பார்த்திபனை வெகுவாக பாராட்டினார். இந்த படத்தை பார்த்து இருக்காவிட்டால் நான் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு விஷயத்தை தவறவிட்டிருப்பேன் என்றும் அவர் பாராட்டினார்.

மேலும் பேசிய ராதாரவி, பார்த்திபன் முகத்தை இரண்டு மணி நேரம் தொடர்ந்து பார்க்க முடியுமா? ஆனால் ஒத்த செருப்பு படத்தில் பார்க்க வச்சான்ல அதுதான் திறமை. ஆனால் தற்போது பணம் இருக்குன்னு சில மூஞ்சிங்க நடிக்க வரானுங்க. விளம்பரத்துல ஆடுறத பார்த்து இவன் நடிக்க வருவான்னு அப்பவே ஒரு மேடையில சொன்னேன். அதே மாதிரியே வந்துட்டான்யா என்று லெஜன்ட் சரவணன் அண்ணாச்சியை பற்றி பேசினார். அவரது பேச்சுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். உருவ கேலி செய்யும் இந்த பழக்கத்தை ராதாரவி எப்போது தான் விடுவார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

YouTube Video Code Embed Credits: Galatta Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்