பொன்னியின் செல்வன் படத்தில் வரும் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்துள்ளதாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. அமரர் கல்கி எழுதிய பிரம்மாண்ட நாவலில் வரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து திரையில் படமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மணிரத்தினம். இந்த சரித்திர காவியம் படத்தின் ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியதால் படம் வெளியானவுடன் ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியுள்ளது. கடைசி வரை விறுவிறுப்பாக நகர்ந்த கதை, கிளைமாக்சில் சஸ்பென்ஸ் உடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த பாகத்தின் ரிலீஸ் குறித்து இப்போதிலிருந்து கேட்க துவங்கி விட்டார்கள். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

புத்தகம் படித்தவர்கள் மட்டுமின்றி இதுவரையில் இந்த கதை பற்றி அறியாதவர்களுக்கு மிக எளிதாக புரியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன்பதிவுகள் பல நாட்களுக்கு முன்னரே விற்று தீர்ந்ததுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு திரையரங்கம் எல்லாம் ஹவுஸ்ஃபுல். இந்த படத்தினை ரசிகர்கள் ஒரு பண்டிகை போல கொண்டாடி வருகிறார்கள். படம் வெளியான முதல் நாளே வசூலை வாரி குவிந்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள தமிழ் திரைப்படம் என சாதனை படைத்துள்ளது பொன்னியின் செல்வன். இது உலக நாயகனின் விக்ரம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இப்படி கோலாகலமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஒரு சர்ச் ஏற்பட்டுள்ளது. படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் ஏதோ பிளேபாய் கதாபாத்திரம் போல் காட்டப்பட்டுள்ளதாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த வழக்கை தொடுத்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் கதாநாயகனே வந்திய தேவன் தான். ஆனால் இந்த படத்தில் பெண்களின் பின்னால் திரியும் நபர் போல வந்தியத்தேவன் சித்தரிக்கப்பட்டுள்ளார். உண்மைக்கு புறம்பாக இந்த படத்தை மணிரத்னம் எடுத்திருக்கிறார். சோழ பேரரசான ராஜராஜ சோழனின் தளபதியாக இருந்த வந்திய தேவனை தவறாக சித்தரித்து, மக்கள் மனதில் அவரைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தி இருப்பதாக பொன்னியின் செல்வன் படம் மீதும் மணிரத்தினம் மீதும் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.
Youtube Video Code Embed Credits: Indiaglitz