வெளிநாட்டில் செம்ம கூலாக போஸ் கொடுத்த தல.! ஷாலினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்.!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது வெளிநாட்டிலிருந்து உடல் எடையை குறைத்து செம்ம மாஸாக காட்சியளிக்கும் புகைப்படங்களை அஜீத்தின் மனைவி ஷாலினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக தமிழ் திரையுலகில் வளர்ந்து வந்த நடிகர் தான் நடிகர் அஜித்குமார். இவருக்கு மட்டும் தமிழகத்தில் கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருக்கும் நடிகர் அஜித்குமார், இசை வெளியீட்டு விழாக்கள், படத்தின் பிரமோஷன், விருது வழங்கும் விழாக்கள் என்று எதிலும் கலந்து கொள்வதில்லை. இருந்தபோதிலும் அவரது படத்திற்கும் மவுசு என்றைக்கும் குறைந்ததே இல்லை, மேலும் அவரின் புகைப்படங்கள் கூட வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது சமீப காலமாக அவரின் புகைப்படங்கள் அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் அவ்வப்போது அஜித்தின் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தொடர்புடையவை  சமீபத்தில் வந்த குப்பை படங்களுக்கு விக்ரம் எவ்வளவோ தேவலாம்..ஒரு தடவ பாக்கலாம்..ப்ளூ சட்டை விமர்சனம்

வெளிநாட்டில் செம்ம கூலாக போஸ் கொடுத்த தல.! ஷாலினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்.! 1

விளம்பரம்

அடிக்கடி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லும் அஜித்குமார் தற்போது டி-ஷர்ட் மற்றும் ட்ரவுசர் அணிந்து கேஷுவல் லுக்கில் போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்கள் குவிந்திருக்கிறது. தற்போது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களையும் இந்த புகைப்படங்களே ஆக்கிரமித்து இருக்கிறது. மேலும் படங்களில் நடிப்பதற்காக அஜீத் உடல் எடையை குறைத்து ஒல்லியாக காட்சியளிக்கிறார். தற்போது அஜித்குமார் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை வெகுவாக குறைத்து இருப்பதாக தெரிகிறது. இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்தார். ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டு இயக்குனர் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. அடுத்த மாதம் இறுதியில் இந்த படத்திற்கான சூட்டிங் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

வெளிநாட்டில் செம்ம கூலாக போஸ் கொடுத்த தல.! ஷாலினி பகிர்ந்த அழகிய புகைப்படங்கள்.! 3
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படக்குழுவினர் விடாமுயற்சி என்ற ஃபர்ஸ்ட் லுக்கை மட்டுமே வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த படம் குறித்து எந்த அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது அஜீத் ரசிகர்களுடைய சோர்வை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் அஜித் மீண்டும் பைக்கை எடுத்துக் கொண்டு ரைட் கிளம்பி
இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நவம்பர் மாதத்தில் இருந்து உலகத்தையே பைக்கில் சுற்றிவர தல அஜித் முடிவெடுத்து இருப்பதால் அதற்குள் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment