Categories: சினிமா

அதிதியுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்த ராதிகா.! துணிக்கடை விளம்பரம் எடுக்கும் போது அலப்பறை

வெளியிட்டது

நடிகை அதிதியுடன் சேர்ந்து ராதிகா துணிக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. மேலும் அதன் மேக்கிங் வீடியோ ஒன்றையும் தற்போது அதிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அதிதி. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி, மருத்துவம் படித்துவிட்டு சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். இவர் சினிமாவில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணத்தில் காலடி எடுத்து வைத்துள்ளதாக கூறினார். முதல் படமே நடிகர் கார்த்திக் உடன் இணைந்து விருமன் படத்தில் நடித்து முடித்து இருந்தார். பின்னர் தற்போது இவர் மாவீரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

அதிதியுடன் சேர்ந்து குறும்புத்தனம் செய்த ராதிகா.! துணிக்கடை விளம்பரம் எடுக்கும் போது அலப்பறை 1

தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வரும் அதிதியின் மீது சிலர் விமர்சனங்களையும் முன் வைத்தார்கள். ஷங்கரின் மகள் என்பதாலேயே இவருக்கு இவ்வளவு எளிதாக வாய்ப்புகள் கிடைப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். ஆனால் இதை எல்லாம் மறுத்த அதிதி வாய்ப்பு கிடைத்தால் மட்டும் போதாது, அதை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கும், அதற்கு முதலில் மக்கள் தம்மை ரசிக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அதிதி அடுத்தபடியாக ஒரு துணிக்கடை விளம்பரத்தின் நடித்துள்ளார். அதுவும் தமிழின் மிக மூத்த நடிகையான ராதிகாவுடன் இணைந்து அவர் நடித்திருக்கிறார். அந்த வீடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது.

அதற்குள் அதிதி துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க வந்து விட்டாரே என்று பலரும் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் அதுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோவில் அதிதிக்கு இணையாக ராதிகாவும் சேர்ந்து நடனம் ஆடுகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாக இருக்கிறது. நீங்களும் அதை காண..

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்