பொன்னியின் செல்வன் திரைப்படம் தெலுங்கு திரைப்படம் என்று சுஹாசினி பேசியதாக ஒரு வீடியோவை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். கல்வியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகப்பிரமாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ள படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்திக், ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தை மணிரத்னம் இயக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் நான்கு நாட்களே இருக்கும் நிலையில் பட குழுவினர் தீவிரமாக பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோலி முடிஞ்சு 😂😂😂 #PS1 #PonniyinSelvan #NaaneVaruvean #NaaneVaruveanFromSep29 pic.twitter.com/2EujPYqU04
— Velailla Pattathari Rajesh ( Back up I'd) (@VelaillaR) September 26, 2022
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என ஐந்து இடங்களில் பிரமோஷன் பணிகளை முடித்திருக்கிறது படக்குழு. இன்று இறுதியாக டெல்லிக்கு சென்று அங்கும் தனது பிரமோஷன் பணிகளை முடித்து சென்னை திரும்புகிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. மேலும் படத்தின் பிரீ புக்கிங் டிக்கெட் அமெரிக்காவில் நேற்று மட்டுமே மூன்று கோடிக்கும் மேலாக வசூலாகியிருந்தது. தமிழகத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி இருந்தது. எனவே படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் படத்தின் பிரமோஷனை செய்து கொண்டிருந்தபோது இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி சுஹாசினி சில கருத்துக்களை கூறினார். அப்போது அவர் இது உங்கள் படம் நாங்கள் தமிழகத்தில் பாண்டிச்சேரி மற்றும் பொள்ளாச்சியில் மட்டுமே சில காட்சிகளை எடுத்தோம். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் எடுத்தோம். இது உங்கள் படம் என்று அவர் பேசியிருந்தார். ஆனால் இதை சிலர் சிரித்து இது தெலுங்கு படம் என்று அவர் கூறியதாக கிளப்பி விட்டுள்ளனர். இதற்கு சரியான பொன்னியின் செல்வன் ரசிகர்கள் சரியான பதிலடியும் கொடுத்து வருகின்றனர். அவர் அவ்வாறு கூறவே இல்லை, தேவையில்லாத வதந்தியை கிளப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kalkki naval