சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்ற ராதிகா.! புது சீரியல் பற்றிய முக்கிய அறிவிப்பு.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் தான் இயக்கும் புது நாடகமான கிழக்கு வாசல் நாடகத்தைப் பற்றிய அறிவிப்பை தற்போது ராதிகா சரத்குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்த அவர், தனது புது நாடகம் குறித்த அறிவிப்பையும் நாடகத்தில் நடிப்பவர்களின் குறித்த அறிவிப்பையும் தற்போது வெளியிட்டு இருக்கிறார். 90களில் இருந்து முன்னணி நடிகையாக வலம் பெறுபவர் நடிகை ராதிகா சரத்குமார். இவர் 1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்கிற படத்தின் மூலமாக அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே ஒரு படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்த அவருக்கு சரத்குமார் உடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ராகுல் என்கிற மகனும் இருக்கிறார்.

சன் டிவியில் இருந்து விலகி விஜய் டிவிக்கு சென்ற ராதிகா.! புது சீரியல் பற்றிய முக்கிய அறிவிப்பு.! 1
நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை இயக்குவதிலும் சின்ன திரையிலும் ஆர்வம் காட்டி வருகிறார் ராதிகா சரத்குமார். அவர் ராடான் மீடியா நெட்வொர்க் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக பல சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் அவர் தயாரித்து வழங்கியிருக்கிறார். குறிப்பாக இந்த நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் சரத்குமார். அப்போதுதான் அவருக்கும் ராதிகாவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ராடான் மீடியா ஒர்க்ஸ் மூலமாக சன் தொலைக்காட்சியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறார் ராதிகா.


குறிப்பாக அவர் தயாரித்த சித்தி நாடகம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலை, செல்வி, வாணி ராணி, செல்லமே, அரசி, வாணி ராணி சீசன் 2, சந்திரகுமாரி, திருமகள் போன்ற பல சீரியல்களை அவர் தயாரித்திருக்கிறார். சில சீரியல்களில் அவரே நடித்தும் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் தங்க வேட்டை, கோடீஸ்வரி போன்ற பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் அவர் தொகுத்து வழங்கி இருக்கிறார். தற்போது கொலை, கோஷ்டி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்த நிலையில், தற்போது அது குறித்து அறிவிப்பை ராதிகாவே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.


கிழக்கு வாசல் என்கின்ற பெயரிடப்பட்டுள்ள அந்த சீரியல் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும், ராதிகாவிற்கு ஜோடியாக விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களை கற்றுத் தருகிறது. நம்மில் சிறந்த பகுதியாக நாமே நம்மை வளர்த்துக் கொள்வோம். விஜய் டிவியில் ராடானின் “கிழக்கு வாசல்” தொடங்க இருக்கிறது.

உங்களின் அனைவரின் வாழ்த்துக்களும் தேவை. எஸ்.ஏ சந்திரசேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் பதிவிட்டு இருக்கிறார். மேலும் இந்த நாடகத்தில் ராதிகாவுடன் இணைந்து நடிகர் சஞ்சீவ், நடிகை ரேஷ்மா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். சம்சாரம் அது மின்சாரம் கதையை சற்று மாற்றி இந்த கதை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்