Categories: சினிமா

தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கும் மகன்.! ராதிகா சரத்குமார் மகனின் recent போட்டோஸ்.!

வெளியிட்டது

சரத்குமாரின் மகன் ராகுலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. கைக் குழந்தையாக இருந்த அவர் தற்போது தனது தந்தையின் தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாக மாறிப் போயிருக்கிறார். தமிழ் திரை உலகின் சுப்ரீம் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் சரத்குமார். இவர் தமிழ் திரையுலகில் 1990களில் நடிக்க ஆரம்பித்து இன்று வரை சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த முடித்து இருக்கிறார்.

தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கும் மகன்.! ராதிகா சரத்குமார் மகனின் recent போட்டோஸ்.! 1

 

இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ருத்ரன். இந்த படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருக்கிறார் சரத்குமார். தற்போது கைவசம் கஸ்டடி, பொன்னியின் செல்வன் பாகம் 2, கிரிமினல், தி ஸ்மைல் மேன், பரம்பொருள், நிறங்கள் மூன்று போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்து மீண்டும் கம் பேக் கொடுத்திருக்கிறார்.


சமீப காலமாக ராதிகா மற்றும் சரத்குமாரின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருவது வழக்கமாக இருக்கிறது. ராதிகா மற்றும் சரத்குமாருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். ராதிகாவும் சரத்குமாரும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2001 ஆம் ஆண்டு ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரேடான் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் சரத்குமார். அப்போது அவருக்கும் ராதிகாவிற்கும் காதல் மலர்ந்தது.

இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு 2004ம் ஆண்டு ராகுல் என்கிற மகன் பிறந்தார். ராதிகா சரத்குமாருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து ஆகியிருந்தது. அதில் இரண்டாவதாக ஆங்கிலேயர் ஒருவருடன் திருமணம் ஆகி அவர்களுக்கு ரயான் என்கிற மகள் இருக்கிறார். அதேபோல் சரத்குமாருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி வரலட்சுமி, பூஜா என்கிற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.


இந்த நிலையில் சரத்குமார் மற்றும் ராதிகாவிற்கு பிறந்த மகன் ராகுல் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. எப்போதாவது அவருடைய புகைப்படங்கள் வெளியாவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் பெட்டி படுக்கையுடன் தற்போது கிளம்பி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அவர் வெளியூருக்கு ஏதும் படிக்கச் செல்கிறாரா? அல்லது வெளியூரில் இருந்து சென்னை வந்துள்ளாரா? என்பது தெரியவில்லை. லக்கேஜ் மற்றும் சூட்கேஸ் உடன் வந்து நிற்கும் ராகுலை ராதிகாவும் சரத்குமாரும் கட்டி அணைத்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

19 வயதாகும் ராகுல் தற்போது ராதிகா மற்றும் சரத்குமாரின் தோளுக்கு மேல் வளர்ந்து தோழனாகி நிற்கிறார். ராப் பாடகராக இருக்கும் இவர் சன் டேக் ஆஃப் மூலம் இசை உலகிற்கு அறிமாகி இருந்தார். இந்த ஆல்பத்தை ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் விரைவில் பாடகராக ராகுல் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்