Categories: சினிமா

குழந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்..! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

ராகவா லாரன்ஸ் திடீரென ஒரு சிறுவனின் காலில் விழும் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். தமிழ் உலகில் வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனராக இருந்து பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த காரணத்தினால் படங்களில் நடித்தார். இவர் முனி என்ற ஒரு பேய் படத்தில் நடித்தார். அதுதான் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது. பின்னர் காஞ்சனா போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது ருத்ரன் என்ற படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். பேய் படங்களில் இவர் நடித்த பின்பு நல்ல வரவேற்பு இருந்ததால் இவர் தொடர்ந்து பேய் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் இவர் நடன பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறார். அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

குழந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ராகவா லாரன்ஸ்..! என்ன காரணம் தெரியுமா? 1

தன்னுடைய நடன பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை நடனமாட வைத்து, அவர்களை படத்திலும் நடனமாட வைத்துள்ளார். இரக்க குணம் கொண்ட இவர் அறக்கட்டளை நடத்தி பல குழந்தைகளின் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி புரிந்திருக்கிறார். பல குழந்தைகள் என்று உயிரோடு இருப்பதற்கும் இவர் காரணமாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இனிமேல் தன் அறக்கட்டளைக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம். நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன். நானே அறக்கட்டளையை பார்த்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறேன். பல படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறேன். எனவே நான் தனி ஆளாக இருந்து அந்த அறக்கட்டளையை நடத்த இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

தற்போது இன்று மீண்டும் புதிய பதிவு ஒன்றே போட்டுள்ளார். அதில் இனி நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்கள் என் காலில் விழக்கூடாது. ஆனால் அவர்கள் காலில் நான் விழுவேன் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். ஏழைகள் பணக்காரர்களின் கால்களில் உதவி கேட்பதை பார்த்து இருக்கிறேன். ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். ஒரு குழந்தையின் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக பெற்றோர்கள் என் கால்களில் விழுந்தனர். அப்போது அந்த குழந்தை அழுதது. அப்போது எனக்கு அந்த வலி புரிந்தது. குழந்தைகளுக்கு முன்னால் எந்த அப்பாவும் ஹீரோவாக இருக்க விரும்புவார்கள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த குழந்தையை என் காலில் விழ வைக்கிறார்கள். குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று நான் நம்புகிறேன். அந்தக் குழந்தை என் கால்களில் விழுந்த போது கடவுள் என் கால்களில் விழுவது போல் உணர்ந்தேன். சில கிராமங்களில் முதியவர்களும் என் கால்களில் விழுகிறார்கள். இது சரியானதா?

அவர்கள் தான் எனக்கு புண்ணியம் வழங்குகிறார்கள் எனவே நான் உதவி செய்துவிட்டு அவர்கள் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க விரும்புகிறேன். அனைவரின் ஆசிகளும் எனக்கு தேவை. இது தொடர்பாக வீடியோ ஒன்றை விரைவில் வெளியிட விரும்புகிறேன் என்று மிகப்பெரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ராகவா லாரன்ஸுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன இருந்தாலும் உங்கள் பெரிய மனது யாருக்கும் வராது என்று கமெண்ட்களில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்