Categories: சினிமா

KPY பாலாவிற்கு தனது அம்மா கையால் 10 லட்சம் ரூபாய் வழங்கிய ராகவா லாரன்ஸ்.! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

ருத்ரன் பட ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் மிகப்பெரிய தொகை ஒன்றை பரிசாக கொடுத்து, இதை வைத்து குழந்தைகளை படிக்க வைக்குமாறு அறிவுரை கூறியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமாகி மக்கள் மனங்களை வென்ற ஒரு காமெடி நடிகர் என்று சொன்னால் அது பாலா தான். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பாலாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியது. யாராவது ஜோக் சொன்னால் அதற்கு உடனடியாக பதில் கவுண்ட்டர் சொல்லி பலரின் மனங்களை வென்றிருந்தார் பாலா. அதுமட்டுமல்லாமல் தான் சம்பாதிக்கும் அனைத்து பணத்தையும் ஏழை குழந்தைகளின் படிப்பு செலவிற்காக செலவிட்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

KPY பாலாவிற்கு தனது அம்மா கையால் 10 லட்சம் ரூபாய் வழங்கிய ராகவா லாரன்ஸ்.! என்ன காரணம் தெரியுமா? 1

தான் சம்பாதிக்கும் சிறிய பணத்தை கூட ஏழைக் குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் முதியோர்களின் நலனுக்காகவும் செலவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பாலா. இதையெல்லாம் அவர் வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து தான் செய்து வந்தார். ஒருமுறை விஜய் தொலைக்காட்சியில் விருது வழங்கும் விழாவில் ஒரு காணொளியில் இதை போட்டு காண்பித்த பின்னர் தான் அனைவருக்கும் பாலாவின் இந்த உதவும் மனப்பான்மை குறித்து பலருக்கும் தெரிய வந்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்த ஸ்ருதிகா தான் வென்று ஐந்து லட்சத்திலிருந்து ஒரு லட்ச ரூபாயை பாலாவிற்கு கொடுத்திருந்தார். அதேபோல கோமாளியாக புகழுக்கு கிடைத்த ஒரு லட்ச ரூபாயையும் அவர் பாலாவிற்கு கொடுத்து பிள்ளைகளை படிக்க வைக்குமாறு கூறி கொடுத்திருந்தார். இப்படியாக பலரும் பாலாவுக்கு உதவி செய்து வரும் நிலையில் தற்போது ராகவா லாரன்ஸும் பாலாவிற்கு உதவி செய்திருக்கிறார்.


ருத்ரன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் மேடையில் பேசிய ராகவா லாரன்ஸ் பாலா ஒரு நடிகர் மட்டுமல்லாமல், சமூக அக்கறை கொண்டவர், தான் சம்பாதித்த பணத்தின் மூலமாக பல குழந்தைகளை படிக்க வைத்து வருவதும் பெரியோர்களின் மருத்துவ குழுவிற்கும் உதவி வருவதும் தனக்கு தெரியவந்தது. இதனால் பாலாவிற்கு தான் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாயை இந்த மேடையில் வழங்குகிறேன். மேலும் நீ எத்தனை குழந்தைகளை படிக்க வைக்கிறாயோ அத்தனை குழந்தைகளின் படிப்பு செலவையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்லி முதல் கட்டமாக பாலாவிற்கு 10 லட்சம் ரூபாய் தொகையை வழங்கியிருந்தார் ராகவா லாரன்ஸ். மேலும் அதை தனது தாயார் கையால் வழங்கி பாலாவை சிறப்பித்தார். இதனால் நெகிழ்ந்து போன பாலா ராகவா லாரன்ஸை கட்டிப்பிடித்து தனது நன்றியை வெளிப்படுத்தி இருந்தார். பலரும் லாரன்ஸின் இந்த உதவிக்காக அவரை வாழ்த்தி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sun Tv

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்