Categories: சினிமா

பேய் படங்களை கை விட்டு ஆக்ஷனில் மிரட்டியுள்ள ராகவா லாரன்ஸ்.! ருத்ரன் படத்தின் டீசர் வெளியானது

வெளியிட்டது

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் உலகில் வித்தியாசமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனராக இருந்து பின்னர் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த காரணத்தினால் படங்களில் நடித்தார். முதல்முதலாக முனி என்ற ஒரு பேய் படத்தில் நடித்தார். அதுதான் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது. பின்னர் காஞ்சனா போன்ற படங்களில் நடித்து உள்ளார். தற்போது ருத்ரன் என்ற படத்திலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வருகிறார். பேய் படங்களில் இவர் நடித்த பின்பு நல்ல வரவேற்பு இருந்ததால் இவர் தொடர்ந்து பேய் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அது மட்டுமில்லாமல் இவர் நடன பள்ளி ஒன்றில் நடத்தி வருகிறார். அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பேய் படங்களை கை விட்டு ஆக்ஷனில் மிரட்டியுள்ள ராகவா லாரன்ஸ்.! ருத்ரன் படத்தின் டீசர் வெளியானது 1

தன்னுடைய நடன பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை நடனமாட வைத்து, அவர்களை படத்திலும் நடனமாட வைத்துள்ளார். இரக்க குணம் கொண்ட இவர் அறக்கட்டளை நடத்தி பல குழந்தைகளின் இதயமாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி புரிந்திருக்கிறார். பல குழந்தைகள் என்று உயிரோடு இருப்பதற்கும் இவர் காரணமாக இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் இனிமேல் தன் அறக்கட்டளைக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம். நான் இப்பொழுது நன்றாக இருக்கிறேன். நானே அறக்கட்டளையை பார்த்துக் கொள்ள முடிவெடுத்து இருக்கிறேன். பல படங்களில் ஒப்பந்தமாக இருக்கிறேன். எனவே நான் தனி ஆளாக இருந்து அந்த அறக்கட்டளையை நடத்த இருக்கிறேன் என்று அவர் பதிவிட்டு இருந்தார்.

தற்போது ருத்ரன், சந்திரமுகி 2, துர்கா, அதிகாரம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடித்து வரும் ருத்ரன் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த டீசரை காண.!

Youtube Video Code Embed Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்