துபாயில் நடந்த திருமணம்.! கணவருடன் குத்தாட்டம் போட்டு செம்ம vibe செய்த பூர்ணா.!

நடிகை பூர்ணா தனது திருமண வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் முஸ்லீம் தொழிலதிபர் ஒருவரை துபாயில் வைத்து திருமணம் செய்து கொண்டார் பூர்ணா. கேரளாவில் பிறந்து வளரந்த சம்னா காசிம் பூர்ணா என்ற அடையாளத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் முண்ணனி நடிகையாக வலம் வருகிறார். இவர் முதன் முதலாக இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் “முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு” படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழை விட தெலுங்கில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கியது.

துபாயில் நடந்த திருமணம்.! கணவருடன் குத்தாட்டம் போட்டு செம்ம vibe செய்த பூர்ணா.! 1

விளம்பரம்

முனியாண்டி விலங்கியல் படத்தை தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். 2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

தொடர்புடையவை  இப்படிதான் செத்து போகணும்னு ஆசைபட்டாரு! அது மாதிரியே நடந்துடுச்சு..பிரதாப் போத்தன் இறப்பு பற்றி பேசிய கனிகா

துபாயில் நடந்த திருமணம்.! கணவருடன் குத்தாட்டம் போட்டு செம்ம vibe செய்த பூர்ணா.! 3

விளம்பரம்

தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். தமிழில் பிசாசு 2, அம்மாயி, பேசும் படம் போன்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டுள்ளதாக அறிவித்து இருந்தார். இன்று தனது திருமண வீடியோவை அவர் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் ஷேக்குகளுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the below video..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment