Categories: சினிமா

பொண்ணா அடக்கமா இருக்க முடியாது..! Keerthy Suresh மிரட்டும் “ரகு தாத்தா” படத்தின் ட்ரைலர் இதோ…!

வெளியிட்டது

முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ரஜினி முருகன் படத்தில் நாயகியாக நடித்து சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து உள்ளார். தற்போது பாலிவுட்டில் ஜான் பேபி எனும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இதன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களம் இறங்க உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொண்ணா அடக்கமா இருக்க முடியாது..! Keerthy Suresh மிரட்டும் "ரகு தாத்தா" படத்தின் ட்ரைலர் இதோ...! 1

தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக உருவெடுத்து உள்ளார். இவருக்கு அடுத்ததாக ரகு தாத்தா படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது. சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறது. இப்படத்தில் இவருடன் தேவதர்ஷினி, எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய் ஆகியோர் நடித்து உள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Embed Video Credits : SAREGAMA TAMIL

வெளியிட்டது

புதிய செய்திகள்