Categories: சமூகம்

அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்!

வெளியிட்டது
அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம் தகவல்! 1

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் படி :

“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவுகிற வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகக் குறைந்து 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்”.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்