மீண்டும் இங்கிலாந்தின் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்!

மீண்டும் இங்கிலாந்தின் பிரதமரானார் போரிஸ் ஜான்சன்! 1

இங்கிலாந்தில் நேற்று நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அதில் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். மேலும் அவர் பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு மக்கள் உத்தரவு அளித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய இடங்களில் தேர்தல் தொடங்கியது. 18 வயதை தாண்டிய மக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால் 4 கோடியே 60 லட்சும் பேர் வாக்களித்தனர். தேர்தல் முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டது. துவக்கத்தில் தொழிலாளர் கட்சி சில இடங்களில் முன்னிலை வகித்தது. பின்பு நேரம் செல்லச் செல்ல கன்சர்வேடிவ் கட்சி முன்னிலையில் வரத் தொடங்கியது.

விளம்பரம்

பெரும்பான்மைக்கு 326 இடங்களில் வெற்றி பெற வேண்டும். கன்சர்வேடிவ் கட்சி 337 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தொழிலாளர் கட்சி 199 இடங்களில் வென்றது. ஆதலால் மீண்டும் போரிஸ் ஜான்சன் அவர்கள் இங்கிலாந்தின் பிரதமரானார். அவர் கூறியதாவது

தொடர்புடையவை  2,200 ஆண்டுகளுக்குப் பிறகு எகிப்து மன்னரின் கோவில் கண்டுபிடிப்பு!!

“பிரெக்ஸிட்டை நிறைவேற்றவும் இந்நாட்டை ஒருங்கிணைத்து முன்னோக்கி எடுத்துச் செல்லவும் மக்கள் சக்திவாய்ந்த உத்தரவை வழங்கியுள்ளதாக தெரிகிறது. இது ஒரு வரலாற்றுத் தேர்தலாக மாறும் என்று நான் நினைக்கிறேன். “

விளம்பரம்

மேலும் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியைப் பிடித்ததற்காக போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார.

விளம்பரம்

Leave a Comment