
சக்ரா’ என்ற படத்தில் விஷால் நடிக்க உள்ளார். அதையடுத்து, ‘அரிமா நம்பி’ படத்தின் டைரக்டர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ரிதுவர்மா நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், தெலுங்கு பட உலகில் ராசியான நடிகையாக கருதப்பட்டு வருகிறார். ரிதுவர்மா நடித்த தெலுங்கு படங்கள் வெற்றிகரமாக ஓடியிருப்பதாக பேசப்படுகிறது.
விளம்பரம்
இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘வேலையில்லாத பட்டதாரி-2’ படத்தில், ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். கவுதம் வாசுதேவ் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்து இருந்தார்
விளம்பரம்