பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான ரைசா வில்சனின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிர்கள், இவர் முகத்திற்கு பிளாஸ்டிக் சர்ஜரி எதுவும் செய்து கொண்டாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மாடலிங் துறையைச் சேர்ந்தவர் நடிகை ரைசா வில்சன். ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து வந்த இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 1 முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டார்.
அதன் பின்னர் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலின் அசிஸ்டன்டாக நடித்து திரை உலகில் அறிமுகமானார்.
பின்னர் பிக் பாஸில் கலந்துகொண்ட ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்தார். தொடர்ந்து ‘வர்மா’, ‘எஃப்ஐஆர்’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் அவர் தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்தபோது அவர் முகம் தோற்றம் மாறி இருக்கிறது. ரைசாவை போலவே காட்சியளிக்கவில்லை. சிரிக்கும் பொழுது கன்னம் கஷ்டப்பட்டு விரிவடைவது போல இருந்ததாக ரசிகர்கள் கமெண்ட்களில் கூறி வந்தனர்.
மேலும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டீர்களா? என்று தொடர்ந்து ரைசாவிடம் கேள்விகை கேட்டு வருகின்றனர்.
அழகை கூட்டுவதற்காக பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு, பின்னர் அவர்கள் முகப்பொலிவை இழப்பது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் ரைசாவும் இணைந்து விட்டாரோ? என்று இந்தப் புகைப்படங்களை பார்க்கும் பொழுது எண்ணத் தோன்றுகிறது.