விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது பிரபல மிமிக்ரி கலைஞராக இருக்கும் நவீன் அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல பேசிக் காட்டுகிறார். அதில் பதிலுக்கு பாடகர் மனோவும் சூப்பர் ஸ்டார் போல பேசிக் காட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் கடந்த 9 ஆண்டுகளில் 9 சீசன்களை ஒளிபரப்பி முடித்து இருக்கிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. தற்போது பத்தாவது சீசன் சீனியரை ஒளிபரப்பி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் நடுவர்களாக மனோ, அனுராதா ஸ்ரீராம், சுஜாதா மோகன் மற்றும் ஷான் ரால்டன் ஆகியோர் பங்கெடுத்திருக்கின்றனர். பல நெகிழ்ச்சியான தருணங்களும், திருப்பங்களும், திறமையான போட்டியாளர்களும் இந்த சீசனில் பங்கெடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் விஜய் டிவியின் ‘கலக்கப்போவது யாரு’ இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவரும், நடிகருமான நவீன் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல மிமிக்ரி செய்து பேசுகிறார்.

பதிலுக்கு பாடகர் மனோவும் சூப்பர் ஸ்டார் போல பேசிக் காட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பாடகர் மனோ சூப்பர் ஸ்டாருக்கு தெலுங்கில் பல படங்களில் பின்னணி பேசியவர் என்பதால் சூப்பர் ஸ்டாரின் குரலை அப்படியே மிமிக்ரி செய்து காட்டியிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television