என் குழந்தையை கண்டு பிடிக்க முடியாதா? அவசரத்தில் த ற் கொ லைக்கு முயன்ற அர்ச்சனா.!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியலின் தற்போதைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தனது குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்ததும் அர்ச்சனா தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். ஆனால் அவரை மீட்டு காப்பாற்றி விடுகின்றனர். பின்னர் பக்கத்து வீட்டு குழந்தைக்காக நீ ஏன் இவ்வளவு துடிக்கிறாய்? அவர்களது அம்மா அப்பாவே சும்மா இருக்கிறார்கள், உனக்கு என்ன இவ்வளவு கவலை என்று சந்தியா அர்ச்சனாவை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். இதனால் பதில் சொல்ல முடியாமல் அமர்ந்திருக்கிறார் அர்ச்சனா. தான் குழந்தையை மாற்றிய விஷயத்தை அர்ச்சனா இப்போதாவது அனைவரிடமும் கூறுவாரா என்று எதிர்பார்ப்பில் அந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. ராஜா ராணி சீரியல் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. பல தடைகளை மீறி தற்போது சந்தியா ஐபிஎஸ் ஆக பொறுப்பேற்று இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் குழந்தையை கண்டு பிடிக்க முடியாதா? அவசரத்தில் த ற் கொ லைக்கு முயன்ற அர்ச்சனா.! 1
ராஜா ராணி தொடர் சற்று வித்தியாசமானது. இந்த தொடரில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கும் ஹீரோயின் சந்தியா இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனை திருமணம் செய்து கொண்டு விட்டார். அவர் எப்படி தனது மனைவியின் ஆசையை நிறைவேற்றப் போகிறார் என்பது குறித்த கதையாக இந்த கதை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கதைப்படி பல தடைகளை மீறி ட்ரைனிங்கை முடித்து சொந்த ஊருக்கே போஸ்டிங் வாங்கி விட்டார் சந்தியா. வீட்டில் தொடர்ந்து ஏதாவது ஒரு பிரச்சனை நடந்து கொண்டே இருக்கிறது. சந்தியாவின் கணவரின் தம்பி ஒரு பக்கம் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரை கையும் களவுமாக பிடித்து காவலில் ஒப்படைக்கிறார் சந்தியா. இது ஒரு புறம் இருக்க தற்போது அவர் சந்தியா கணவரின் இன்னொரு தம்பியான செந்தில் அவரது மனைவி தனது குழந்தையை பக்கத்து வீட்டுக்காரியுடன் மாற்றி வைத்து விட்டார். தனது குழந்தை பக்கத்து வீட்டில் வளர்ந்து வருகிறது, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தையை அவர் எடுத்துக் கொண்டார்.


இந்த நிலையில் குழந்தைக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று அர்ச்சனா பக்கத்து வீட்டில் வளரும் தனது குழந்தையை எடுத்துச் செல்வதற்காக வருகிறார். ஆனால் குழந்தையை திருடர்கள் திருடிக் கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் மணமுடைந்த அர்ச்சனா கதறி அழுகிறார். தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் அவர் தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார். இதை பார்த்த சந்தியா பக்கத்து வீட்டு குழந்தைக்காக நீ ஏன் இப்படி அழுகிறாய் என்று கேள்வி மேல் கேள்வி கேட்க அர்ச்சனா குழந்தையை மாற்றி வைத்த விஷயத்தை ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. அப்படி அவர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் சிவகாமியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அதிரடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்