மண்டைக் காடு பகவதி அம்மனுக்கு புடவை சார்த்தி நேர்த்தி கடன் செய்த யோகி பாபு.! இதோ வீடியோ.!

யோகி பாபு இன்று கன்னியாகுமரியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று நண்பர்களுடன் சென்று அவர் சாமி தரிசனம் செய்துள்ளார். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் துணை இயக்குனராக தனது வாழ்க்கை ஆரம்பித்தவர் பாபு. அவர் முதன்முதலாக யோகி என்கிற படத்தில் நடித்ததன் மூலமாக யோகி பாபு என்று அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை அவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது யோகி பாபு அந்தகன், அயலான், சுந்தரா டிராவல்ஸ் 2, ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பூமர் அங்கிள் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மண்டைக் காடு பகவதி அம்மனுக்கு புடவை சார்த்தி நேர்த்தி கடன் செய்த யோகி பாபு.! இதோ வீடியோ.! 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. கூர்கா, தர்ம பிரபு, மண்டேலா போன்ற படங்கள் யோகி பாபு ஹீரோவாக நடித்த சில படங்களாகும். மேலும் நெல்சன் திலீப் குமார் இயக்கிய முதல் படமான கோலமாவு கோகிலா என்கிற படத்தின் மூலமாக சினிமாவில் புதிய உயரத்தை எட்டினார். இதனால் இவருக்கு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் யோகி பாபு நடித்து முடித்துள்ளார். யோகி பாபுவின் குடும்பத்தை பொறுத்தவரை அவருக்கு 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் மஞ்சு பார்கவி என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவியை கோவிலில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார் யோகி பாபு.

தொடர்புடையவை  தமிழ் போர் அடிச்சிடுச்சு..ஹாலிவுட்க்கு இசை அமைக்கும் மாஸ்ட்ரோ! வேற லெவல் சம்பவம் | Stranger things

மண்டைக் காடு பகவதி அம்மனுக்கு புடவை சார்த்தி நேர்த்தி கடன் செய்த யோகி பாபு.! இதோ வீடியோ.! 3

விளம்பரம்

இந்த தம்பதிகளுக்கு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விசாகன் என்று பெயர் வைத்தார் யோகி பாபு. முருக பக்தரான அவர் முருகனின் பெயரை சூட்ட வேண்டும் என்பதால் இந்த பெயரையே வைத்திருந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு யோகி பாபு மஞ்சு பார்கவி தம்பதிகளுக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட யோகி பாபு அடிக்கடி கோவில்களில் சென்று வழிபாடு நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் கன்னியாகுமரியில் உள்ள மண்டை காடு பகவதி அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment