ஐஸ்வர்யா தான் என்னை திருட தூண்டினார்.! ஐஸ்வர்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து பணிப்பெண்.!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடு போன வழக்கில் கைதான ஈஸ்வரி தற்போது ஐஸ்வர்யா பற்றியே அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா சில நாட்களுக்கு முன்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை காணவில்லை என்றும் எங்கள் வீட்டில் பணிபுரிந்த ஆண் மற்றும் பெண் பணியாளர் இருவர் மீது சந்தேகமாக இருக்கிறது, விரைந்து அந்த நகைகளை கண்டுபிடித்து தருமாறு அவர் புகார் அளித்திருந்தார். மேலும் தனது தங்கையின் திருமணத்திற்கு பின்னர் 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு மூன்று முறை வீடுகள் மாறிய பிறகும் அந்த நகைகள் எடுக்கப்படவே இல்லை. தற்போது நகைகள் மாயமாகி இருப்பதாக தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா தான் என்னை திருட தூண்டினார்.! ஐஸ்வர்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து பணிப்பெண்.! 1

விளம்பரம்

ஐஸ்வர்யா கொடுத்த புகாரையடுத்து தற்போது அவர்கள் வீட்டில் பணி புரிந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் இருவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.தற்போது ஈஸ்வரி அளித்திருந்த வாக்கு மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர். “ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்கள் வேலை பார்த்து வருகிறார்கள், தான் ஒருவர் மட்டுமே பெண். எனவே ஐஸ்வர்யா என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து இருந்தார். மேலும் ஐஸ்வர்யாவுக்கு நெருக்கமாகவும் இருந்து வந்தேன், அதனால் அவர் நகைகளை எங்கே வைப்பார்? லாக்கர் எங்கே இருக்கிறது? லாக்கர் சாவி எங்கே வைப்பார் என்பது வரை எனக்கு அனைத்தும் தெரியும், இதனால் நகைகளை திருட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கொஞ்சமாக திருடினேன், அப்போது எல்லாம் ஐஸ்வர்யா அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. எனவே பிறகு அதிகமாக திருட ஆரம்பித்தேன்.

தொடர்புடையவை  படம் பாக்குறவன ஏமாத்தி இன்னும் எவ்வளவு நாள் காசு பாக்க போறீங்க? திட்டி தீர்த்த ப்ளூ சட்டை மாறன்.!

ஐஸ்வர்யா தான் என்னை திருட தூண்டினார்.! ஐஸ்வர்யா மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்து பணிப்பெண்.! 3

விளம்பரம்

நகை திருடு போவதை ஐஸ்வர்யா கண்டுகொள்ளாமல் இருந்ததால் தான் நான் நகைகளை திருடினேன், எனவே என்னை திருட தூண்டியது ஐஸ்வர்யா தான் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார் ஈஸ்வரி. மேலும் தனக்கு ஐஸ்வர்யா நிறைய வேலைகளை வாங்கிவிட்டு மாதம் வெறும் 30 ஆயிரம் மட்டும் சம்பளம் கொடுப்பார். அதனால் தான் நகைகளை திருடியதாக கூறியுள்ளார். இந்த செய்தி வெளியானது முதல் மாதம் 30 ஆயிரம் உங்களுக்கு கம்மி சம்பளமா என நெட்டிசன்கள் காமெடியாக பதிவிட்டு வருகின்றனர். நீங்களும் அந்த செய்தியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Polimer News

விளம்பரம்

Leave a Comment