ராஜா ராணி சீரியலை முடித்து End Card போட இருக்கும் விஜய் டிவி.! கடைசி ப்ரோமோ வெளியானது.!

வெளியிட்டது

ராஜா ராணி சீரியல் தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தெரிகிறது. இந்த சீரியலின் இறுதி ப்ரோமோ என்று விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியல் 2 தற்போது முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ராஜா ராணி சீசன் 2 சற்று வித்தியாசமான குடும்ப கதை அம்சத்தை கொண்டது. கண்டிப்பான குடும்பத்தில் மருமகளாக இருக்கும் சந்தியா தான் ஒரு ஐபிஎஸ் ஆக வேண்டும் என்கிற கனவில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் ஐபிஎஸ் ஆக கூடாது வீட்டிற்கு அடங்கிய மருமகளாக இருக்க வேண்டும் என்று மாமியார் சிவகாமி இருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் பல தடைகளையும் மீறி சந்தியா ஐபிஎஸ் ஆக பதவி வாங்கி இருக்கிறார். தனது சொந்த ஊரான தென்காசிக்ககே அவருக்கு போஸ்டிங் கிடைத்திருந்தது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராஜா ராணி சீரியலை முடித்து End Card போட இருக்கும் விஜய் டிவி.! கடைசி ப்ரோமோ வெளியானது.! 1

போலீஸ் அதிகாரியாக இருந்த போதிலும் அவரது குடும்பத்திலேயே அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தது. குறிப்பாக அவரது கணவரின் தம்பி கடத்தல் வேலைகளில் ஈடுபட்டார். அவரை கையும் களவுமாக பிடித்திருந்தார் சந்தியா. இந்த நிலையில் அவரது மாமியார் ரவுடி ஒருவரை மண்டையில் அடித்து கொலை செய்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் சிவகாமியின் மகளை ஒரு ரவுடி பலவந்தப்படுத்த முயற்சி செய்திருந்தார் அவரிடமிருந்து தனது மகளைக் காப்பாற்றுவதற்காக அந்த ரவுடியின் தலையில் பலமாக அடித்து அவரை கொலை செய்திருந்தார் சிவகாமி. அந்த உடலை சரவணன் காட்டில் எடுத்துக் கொண்டு போய் யாருக்கும் தெரியாமல் எரித்திருந்தார். இந்த கேஸ் சந்தியாவிடம் வருகிறது சந்தியாகவும். கொலை செய்தவர்களின் பற்றிய துப்பு சந்தியாவிற்கு கிடைக்கவே, தன் வீட்டில் உள்ளவர்களிடமே விசாரணை நடத்துகிறார். தற்போது கணவர் சரவணனை அதிரடியாக கைது செய்து இருக்கிறார் சந்தியா.

இந்த கேஸ் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைக்கு வந்திருக்கிறது. சந்தியாவை இனிமேல் இந்த வீட்டிற்குள்ளேயே நீ வரக்கூடாது என்று மாமியார் சிவகாமி விரட்டி அடிக்கிறார். இதனால் மனமுடைந்து போய் அழுது கொண்டிருக்கிறார் சந்தியா. பிறகு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இறுதி வாரங்களை நோக்கி என்று சொல்லி இந்த ப்ரோமோ வெளியாகி இருப்பதால், இந்த மாதத்துடன் இந்த சீரியல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீரியலில் இருந்து ஏற்கனவே ஆலியா மானசா, ரியா விஸ்வநாதன், விஜே அர்ச்சனா, இயக்குனர் பிரவீன் பென்னட் ஆகியோர் விலகிய நிலையில் சீரியலின் டிஆர்பி ரேட்டிங் குறைந்து வருவதால் சீரியலை விரைந்து முடிக்க சீரியல் குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்