தடைகளை மீறி சந்தியாவை சென்னை அழைத்து சென்ற சரவணன்.. இன்றைய முழு எபிசோட் விவரம்

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும், டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி சீசன் 2 வில் தற்போது சந்தியா தனது ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுவதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். செல்லும் வழியில் பேருந்து பாதையிலேயே பிரேக் டவுன் ஆகி நிற்கிறது. அதற்குப் பிறகு இன்று என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம். இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனை சூழ்நிலை காரணமாக திருமணம் செய்து கொண்டுள்ளார் சந்தியா. ஆனால் சந்தியாவிற்கு தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பதுதான் கனவு. ஆனால் வேறு வழியில்லாமல் சரவணனை திருமணம் செய்து கொண்டார். மனைவியின் கனவை புரிந்து கொண்ட சரவணன், சந்தியாவின் ஐபிஎஸ் கனவிற்கு ஒகே சொல்லிவிட்டார். ஆனால் சரவணனின் தாயார் சிவகாமியும், பாட்டியும் தடையாக இருக்கின்றனர். பல தடைகளை மீறி தற்போது சந்தியா சென்னைக்கு நேர்முகத் தேர்விற்காக செல்கிறார்.

தடைகளை மீறி சந்தியாவை சென்னை அழைத்து சென்ற சரவணன்.. இன்றைய முழு எபிசோட் விவரம் 1

செல்லும் வழியில் பேருந்து பாதி வழியிலேயே பிரேக் டவுன் ஆகி நிற்கிறது. இதனால் என்ன செய்வது என்றே தெரியாத சரவணன் ஓடி ஓடி போய் மற்ற வாகனங்களிடம் லிப்ட் கேட்கிறார். அப்போது ராயல் என்ஃபீல்டில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் நிறுத்தி என்னவென்று கேட்க, இதுபோல் தான் ஐபிஎஸ் நேர்முகத் தேர்வுக்கு சென்று கொண்டிருக்கிறேன். நீங்கள் உதவினால் நான் நிச்சயமாக இந்த தேர்வை வென்று விடுவேன் என்று கூறுகிறார் சந்தியா. அவர்களும் தனது வண்டியை எடுத்துக் கொண்டு சென்னைக்கு செல்லுமாறு சரவணனுக்கு வண்டியை கொடுக்கின்றனர். வண்டியை வாங்கிக் கொண்டு சரவணனும் சந்தியாகவும் சென்னைக்கு புறப்படுகிறார்கள். அப்போது வழியில் ஒரு பெண்ணிடம் இருந்து ஒரு பையை திருடர்கள் திருடிக் கொண்டு ஓடுகின்றனர்.

அந்தப் பையை மீட்க, சரவணனும் சந்தியாகவும் வண்டியில் துரத்திச் செல்கின்றனர். ரவுடிகளை மடக்கிப் பிடித்த அவர்கள் பையை திருப்பிக் கொடுக்குமாறு கேட்கின்றனர். ஆனால் அந்த ரவுடிகள் திருப்பிக் கொடுக்க மறுக்கின்றனர். இதனால் அங்கு ஒரு சண்டை காட்சி நடக்கிறது. சண்டை முடிந்த பின்பு சந்தியா சரவணன் கன்னத்தில் முத்தமிடுகிறார். இதனால் 10 நிமிடங்கள் நேர்முகத் தேர்விற்கு தாமதமாக செல்கிறார் சந்தியா. அங்கு சென்ற பின் அவரிடம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. முதலில் நேர்முகத் தேர்விற்கு ஏன் தாமதமாக வந்தீர்கள்? என்ற கேள்வி கேட்கப்படுகிறது அப்போது சந்தியா வரும் வழியில் ரவுடிகள் ஒரு பெண்ணின் பையை பறித்து கொண்டு ஓடியதையும், தாங்கள் சென்று அதை மீட்டுக் கொடுத்ததை பற்றியும் விளக்கி கூறுகிறார். பின்னர் சந்தியாவிடம் பல தனிப்பட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது.

மேலும் இனிப்பு கடை நடத்தி வரும் சரவணனை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என்பது போன்ற மிகத் தனிப்பட்ட கேள்விகளை கேட்கின்றனர். இதற்கு அசராமல் சந்தியா பதிலளிக்கிறார். மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருந்தால் ஒரே இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். பிறகு சந்தியாவிடம் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதே இருந்த போதிலும் ஏன் போலீசாக விருப்பப்படுகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி கேட்கப்படுகிறது. அனைத்திற்கும் சளைக்காமல் பதிலளிக்கிறார் சந்தியா.

அதேநேரம் சந்தியாவின் மாமியார் சிவகாமிக்கு கனவில் பல கெட்ட கனவுகள் வந்துள்ளது. ஏதோ தவறாக நடக்க போகிறது என்று வீட்டாரிடம் கூறிக் கொண்டிருக்கிறார் சிவகாமி. இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. சந்தியா நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று வருவாளா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்