கழட்டிவிட்ட கணவர், கைவிட்ட பெற்றோர்கள்.! திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்திய நண்பர்கள்.!

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தி இருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியாகியிரருந்தது. தற்போது செவ்வந்தி சீரியல் நாடக குழுவினர் அனைவரும் இணைந்து இரண்டாவது முறையாக திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். அந்த அழகான வீடியோவை திவ்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பெங்களூருவை சேர்ந்தவர் திவ்யா ஸ்ரீதர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்தார். அவர் கேளடி கண்மணி, மகராசி போன்ற தொடர்களில் நடித்து வந்தார். கேளடி கண்மணி நாடகத்தில் நடித்து வந்த போது அந்த நாடகத்தில் நடித்த அர்னவ் நடிகருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கழட்டிவிட்ட கணவர், கைவிட்ட பெற்றோர்கள்.! திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்திய நண்பர்கள்.! 1

விளம்பரம்

திவ்யாவை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி திருமணம் செய்து கொண்ட அர்னவ், இருவரும் திருமணம் செய்து கொண்டது குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என்றும், இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிரக்கூடாது என்றும் கண்டித்து இருக்கிறார். இங்கிருந்து தொடங்கி இவர்கள் இருவருக்கும் சண்டை வந்தது. மேலும் அர்னவ் தற்போது நடித்து வரும் செல்லமா சீரியலின் கதாநாயகி உடன் ஒரே வீட்டில் நெருக்கமாக இருப்பதாக கூறி திவ்யா சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் கடுப்பான் அர்னவ், திவ்யா கர்ப்பமாக இருக்கிறார் என்று கூட பார்க்காமல் அவரின் வயிற்றில் எட்டி உதைத்திருக்கிறார். இதை காவல் நிலையத்தில் வழக்காக பதிவு செய்தார் திவ்யா. அதன் அடிப்படையில் அர்னவை கைது செய்து சில நாட்கள் சிறையில் வைத்திருந்தனர். சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள அர்னவ் மீண்டும் செல்லம்மா சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

தொடர்புடையவை  10 நிமிஷம் தரேன் இங்கருந்து ஓடி போய்டு.! துப்பாக்கியை காட்டி ஆதி குணசேகரனை மிரட்டிய ஜீவானந்தம்.!

கழட்டிவிட்ட கணவர், கைவிட்ட பெற்றோர்கள்.! திவ்யாவுக்கு வளைகாப்பு நடத்திய நண்பர்கள்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் சமீபத்தில் திவ்யாவுக்கு அவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தி இருந்தனர். அந்த முதல் வீடியோவை வெளியிட்டு இருந்தார திவ்யா. இந்த நிலையில் நேற்று மீண்டும் செவ்வந்தி சீரியல் செட்டில் வைத்து செவ்வந்தி சீரியல் நடிகர்கள் அனைவரும் சேர்ந்து திவ்யாவிற்கு வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். அந்த வீடியோவையும் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். திவ்யாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பல கஷ்டங்களை கடந்த அவர் நல்ல முறையில் குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்று திவ்யாவின் ரசிகர்கள் கமெண்ட்களில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment