ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தியா.! ஆனால் சிவகாமி போட்ட கண்டிஷன்.

வெளியிட்டது

ராஜா ராணி தொடரில் தற்போது சந்தியா ஐபிஎஸ் எக்ஸாம் பாஸ் செய்து விட்டார். ஆனாலும் அவரது மாமியார் சிவகாமி தற்போது ஒரு போட்டி ஒன்றை வைத்திருக்கிறார். விஜய் டிவியில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் தான் ராஜா ராணி சீசன் 2. இதில் ஹீரோவாக சித்துவும், ஹீரோயினாக ரியா விஸ்வநாதனும் நடித்து வருகின்றனர். ராஜா ராணி சீசன் 2 கதையை பொருத்தவரை இது ஹிந்தியில் வெளியாகி, தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, விஜய் டிவியில் ஒளிபரப்பான “என் கணவன் என் தோழன்” எனும் நாடகத்தின் கதைதான். இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவர் தனது மனைவியின் ஐபிஎஸ் கனவை நிறைவேற்றுகிறாரா? இல்லையா? அதற்கு தடையாக இருக்கும் மாமியாரையும், மாமியார் கொடுக்கும் தடைகளை மீறி அவர் போலீஸ் அதிகாரியாக ஆகிறாரா? இல்லையா? என்பது குறித்த கதை தான் ராஜா ராணி 2. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற சந்தியா.! ஆனால் சிவகாமி போட்ட கண்டிஷன். 1

தற்போது இந்த கதையில் ஐபிஎஸ் நேர்முகத் தேர்விற்காக சந்தியா சென்னைக்கு சென்றார். வழியில் அவருக்கு பல தடைகள் ஏற்பட்டது. அவர் செல்லும் பேருந்து பஞ்சராகி நடுவழியில் நின்றது. பின்னர் ஒருவரிடம் உதவி கேட்டு பைக்கிலேயே சென்னை வரை சந்தியாவை அழைத்துச் சென்றார் சரவணன். அங்கு நேர்முகத் தேர்வில் சந்தியாவிடம் பல கிடுக்குப் பிடியான கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் எதற்கும் சளைக்காமல் பதிலளித்தார் சந்தியா. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் சந்தியாவிற்கு கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்து பார்க்க போது சந்தியா ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன் ட்ரைனிங்க்காக அவர் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் மாமியார் சந்தியாவிடம் சென்று தான் சென்னைக்கு செல்ல வேண்டும் என்று கண்ணீருடன் கேட்கிறார். ஆனால் மாமியார் சிவகாமியோ நம் வீட்டில் காணாமல் போன 5 லட்சத்தை கண்டுபிடித்து கொடுத்துவிட்டு நீ எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று சோதனை வைக்கிறார். ஏற்கனவே சந்தியாவிற்கு பல சோதனைகளை சிவகாமி வைத்திருக்கிறார். இதில் மேலும் சோதனை மேல் சோதனையாக சிவகாமி வைப்பது சிறிது சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the video below…

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்