ராஜா ராணி சீரியலில் சரவணனுக்கு தம்பியாக நடிக்கும் பாலாஜிக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. Black Sheep இந்த யூடியூப் சேனலை தெரியாத ஆட்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிரபலம். இதன் ஓனர் விக்னேஷ்காந்த். ரேடியோவில் ஆர்.ஜேவாக தனது வாழ்க்கையத் தொடங்கிய இவர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். இவருடன் இணைந்து தற்போது குக் வித் கோமாளியில் குக்காக பங்கேற்றுள்ள அரவிந்தும் இணைந்து சிறு சிறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். பிறகு பல தரமான தொடர்களை ஆரம்பித்து இன்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சேனல் பல சேனலாகவும் மாறியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்படுள்ளது.

இதில் நடித்த நாகேந்திர பிரசாத், ஆயாஸ், நந்தினி, ராம் நிஷாந்த், பவி டீச்சர், பாலாஜி, அரவிந்த் சேஜு போன்ற அனைவரும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர். சிலருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இதில் நடித்து வந்த பாலாஜி தியாகராஜனுக்கு விஜய் டிவியின் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றான ராஜா ராணியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோக்கு தம்பியாகவும், கதையின் வில்லி அர்ச்சனாவுக்கு கணவர் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். திடீரென செய்யும் வில்லத்தனங்களை எதிர்க்கும் கணவராகவும், சில சமயம் மனைவி செய்யும் திருட்டுத்தனங்களை சப்போர்ட் செய்யும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நண்பர்கள் திரை பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக ராஜா ராணி சீரியல் குழுவினர் அனைவரும் நேரில் சென்று வாழ்த்தியுள்ளனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Trend Talks