ராஜா ராணி 2 சீரியல் தற்போது மிகுந்த கேலிக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் இரத்ததானம் செய்வதுபோல காண்பிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டி பலரும் இந்த நாடகத்தை திட்டி தீர்த்து வருகின்றனர். ப்ரோமோ வெளியான பின்பு அதன் கமெண்டின் கீழ் இந்த நாடகத்தை பலரும் கழுவி ஊற்றியுள்ளனர். விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் ராஜா ராணி சீசன் 2. இந்தத் தொடர் பல விறுவிறுப்பான கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடர் பயங்கரமான கேலிக்கு உள்ளாகியுள்ளது. கதையின் நாயகன் சரவணனின் தம்பி ஆதி, ஜெசி என்கிற ஒரு மாற்று மதத்து பெண்ணை காதலித்து வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட நெருக்கத்தால் ஜெசி கர்ப்பம் ஆகிவிட்டார். ஆனால் மாற்றுமதம் என்பதால் ஆதியின் வீட்டினர் இந்த காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருந்து வருகிறது. அந்தப் பெண் மதம் மாறினால் அவரை ஏற்றுக் கொள்ளலாம் என்று ஆதியின் பெற்றோர்கள் கூறிவிட்டனர். இது ஒரு புறம் இருக்க சரவணனின் தந்தைக்கு ரோட்டில் விபத்து ஏற்படுகிறது. இதனால் அவர் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏபி நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்தம் ஜெசியிடம் இருப்பதாக கதாநாயகி சந்தியா கூறுகிறார். இதனால் ஜெசியை மருத்துவமனைக்கு வரவழைத்து அவரிடம் இருந்து ரத்தம் வாங்கப்படுகிறது. இதை மேற்கோள் காட்டி சந்தியா அவரது மாமியார் சிவகாமி இடம் இப்பொழுது உங்களுக்கு மதம் தெரியவில்லையா? திருமணம் என்றால் மட்டும் மதம் தெரிகிறதா என்று கேள்வி எழுப்பினார். இந்த ப்ரோமோ இன்று வெளியானது.
இதில் பிரச்சனை என்னவென்றால் ரத்த தானம் செய்த ஜெசி கர்ப்பமாக இருக்கிறார். ஜெசி கர்ப்பமாக இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினையுமே. கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு ஏற்கனவே இரும்பு சத்து குறைவாக இருக்கும், அயர்ன் சத்து குறைவாக இருக்கும் நிலையில் அவர்களால் ரத்ததானம் எப்படி செய்ய முடியும் என்றும், கர்ப்பமாக இருக்கும் ஒருவர் ரத்ததானம் செய்யவே முடியாது ஆனால் டைரக்டர் இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் ஏதோ கதையை உருட்டிக் கொண்டிருக்கிறார் என்றும் கமெண்ட்களை தெறிக்க விட ஆரம்பித்தனர். பார்க்கும் நம்மையெல்லாம் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறாரா இயக்குனர்? என்றெல்லாம் இயக்குனர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.